உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசீனா தஞ்சம்: மத்திய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

ஹசீனா தஞ்சம்: மத்திய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேச நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று ( ஆக.,5) நடந்தது.வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று ( ஆக.,5) அவரது இல்லத்தில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் வங்கதேச நிலவரம், ஹசீனா இந்தியா வந்துள்ளது குறித்து ஆலோசனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ES
ஆக 05, 2024 23:11

Totally agree with every comment here


தாமரை மலர்கிறது
ஆக 05, 2024 22:28

மதஅமைப்புகளை வைத்து இந்த போராட்டத்தை தூண்டிவிட்டது பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ உளவுத்துறை தான். இதை இந்தியா வேடிக்கை பார்த்தது மிக பெரிய தோல்வி. ஹசீனா இந்தியாவின் அமைதிக்கு அடிகோலியவர். அவரது ஆட்சி பறிபோவதை வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. இனிமேல் பாகிஸ்தான் பங்களாதேஷில் உள்விவகாரங்களில் மீண்டும் மூக்கை நுழைக்கும். இப்போதைய பங்களாதேஷ் மக்கள் தங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பாகிஸ்தானிடம் இருந்து முஜிபூர் ரஹ்மான் தலைமையில் இந்தியாவின் உதவியுடன் சுதந்திரம் பெற்றோம் என்பதை அடியோடு மறந்து, முஜிபுர் ரஹ்மான் சிலையை மூர்க்கத்தனமாக உடைக்கிறார்கள். தாத்தா பட்ட கஷ்டத்தை பேரன் மறந்துவிட்டான்.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 22:12

நமது நாட்டிலும் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எதிர்ப்பே இல்லை. ஆக போராட்டம் வகாபி அடிப்படைவாத தீவீரவாத சக்திகளின் சதி.


Ramesh Sargam
ஆக 05, 2024 22:09

உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்திட வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் சிக்கல் உள்ளது. உதவி கேட்டு வந்திருப்பவர் அயல்நாட்டை சேர்ந்த தலைவி ஹசீனா அவர்கள். எதற்கும் இந்த விஷயத்தில் வல்லுநர்கள் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முடிவு இரண்டு நாடுகளுக்கே இடையே பிளவு ஏட்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


subramanian
ஆக 06, 2024 11:02

ரமேஷ் சார், சிக்கல் இல்லாத சர்வதேச பிரச்சனை எதுவும் இல்லை. பங்களாதேஷில் நடப்பது சீனா மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில்தான். அதை முறியடித்து புதிய ஆட்சி அமைக்க முடியும். வரலாற்றின் பக்கங்களில் பாரதம் அனைத்து தேச மன்னர்கள், அனைத்து தேச மக்களுக்கு எப்போதும் அடைக்கலம் கொடுக்கும். இலங்கை மன்னர்கள் எப்போதும் தமிழகத்தில் வந்து தங்குவார்கள். இஸ்ரேல் மக்களுக்கு இரண்டாம் உலக போரின்போது அடைக்கலம் கொடுத்து மகிழ்ந்தோம் . ராஜரீக ரீதியாக நல்லது செய்ய நம்மால் முடியும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை