உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹவாலா பணம் ரூ.26 லட்சம் பறிமுதல்

ஹவாலா பணம் ரூ.26 லட்சம் பறிமுதல்

பாலக்காடு : பாலக்காடு மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் இருந்து, பாலக்காடு ரயில்வே ஸ்டேஷன் வந்த, கோவை- - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்திய போது, அதிகாரிகளை கண்டு தப்பியோட முயன்ற நபரை பிடித்து சோதனையிட்டனர். அவரது பையில் எவ்வித ஆவணங்களின்றி, 26 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து நடத்திய விசாரணையில், மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி செம்மாடு பகுதியைச் சேர்ந்த அன்சார், 47, என்பதும், கோவையிலிருந்து திரூரங்காடிக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்துடன், தொடர் விசாரணைக்காக அவரை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை