மேலும் செய்திகள்
பள்ளி பஸ் கண்ணாடி உடைப்பு ஆசிரியரின் கணவர் கைது
08-Aug-2024
வசந்த்கஞ்ச்:தென்மேற்கு டில்லியில் ஹெட்போன் அணிந்தபடி சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது பள்ளி பஸ் ஏறியது.தென்மேற்கு டில்லியின் வசந்த் கஞ்ச் தெற்கில் நேற்று முன்தினம் பிற்பகல் ஹெட்போன் அணிந்தபடி ஆக்ராவை சேர்ந்த மனோஜ்குமார், 28, என்ற இளைஞர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது பள்ளி பஸ் ஒன்று ஏறி இறங்கியது.சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தியதாக பஸ் டிரைவர் ஜஸ்பிர் தஹியா, 42, கைது செய்யப்பட்டார்.ஹெட்போன் அணிந்தபடி சென்ற மனோஜ்குமார், பஸ் வருவதை கவனிக்கவில்லை என்றும் அவர் சாலையை கடந்துவிடுவார் என்ற கணிப்பில் டிரைவர் பஸ்ஸை இயக்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
08-Aug-2024