மேலும் செய்திகள்
குஜராத்தில் கனமழையால் இயல்பு வாழக்கை பாதிப்பு
27-Aug-2024
அமராவதி: ஆந்திராவில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆந்திராவின் வடக்கு கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.இது மேலும் மேற்கு- - வடமேற்கு நோக்கி நகர்ந்து, விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஆந்திரா முழுதும் தொடர்ந்து மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விஜயவாடாவில் 18 செ.மீ., மழை பதிவானது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.விஜயவாடா அருகே உள்ள குனாதலா மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள வீடு தரைமட்டமானது. அங்கு வசித்த ஒருவர் பலியானது தெரியவந்தது.இதேபோல் ஒடிசாவில் கஜபதி, மல்காங்கிரி, கோரப்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்திலும் கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
27-Aug-2024