ஹைடெக் பேக் ஸ்கேனர் விதான் சவுதாவில் ஏற்பாடு
பெங்களூரு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது, ராமேஸ்வரம் கபேவில் குண்டு வெடித்தது போன்ற சம்பவங்கள் நடந்ததால், பெங்களூரு விதான்சவுதாவில் 'ஹைடெக் பேக்' ஸ்கேனர்கள் பொருத்தப்பட உள்ளன.பெங்களூரு விதான்சவுதாவில், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்ற போது, அவரது ஆதரவாளர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். சமீபத்தில் நகரின் ராமேஸ்வரம் கபேவில், குண்டுவெடிப்பு நடந்தது. எனவே எச்சரிக்கை அடைந்துள்ள அரசு, விதான்சவுதாவில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஹைடெக் பேக் ஸ்கேனர்கள் பொருத்த, ஏற்பாடு நடக்கிறது.பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சோதனை முறையில் ஸ்கேனர் பொருத்தப்பட்டது. மொத்தம் 14 ஸ்கேனர்களை அரசு வழங்கியுள்ளது. விதான் சவுதாவில் ஐந்து ஸ்கேனர்கள் பொருத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜ்பவன், லோக் ஆயுக்தா அலுவலகம், விகாஸ்சவுதா, எம்.எல்.ஏ.,க்கள் பவன், உட்பட பல இடங்களில் ஸ்கேனர் பொருத்தப்படும்.தற்போது பொருத்தப்படும் ஸ்கேனர்கள், அதிநவீனமானது. பைகளில் உள்ள சிறிய பொருட்களையும் அடையாளம் கண்டு, சைரன் மூலமாக ஊழியர்களை எச்சரிக்கும். ஸ்கேனரை பயன்படுத்துவது குறித்து, போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.