உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதட்டை அழுத்துவது வன்கொடுமை அல்ல: சிறுமி பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

உதட்டை அழுத்துவது வன்கொடுமை அல்ல: சிறுமி பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

புதுடில்லி: 'சிறுமியின் உதட்டை அழுத்துவதில் வெளிப்படையான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால், 'போக்சோ' சட்டத்தின் கீழ், அதை பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.டில்லியை சேர்ந்த, 12 வயது சிறுமியின் தந்தை வழி உறவினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சிறுமியின் உதட்டை அழுத்தியதுடன், அருகே படுத்து உறங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.இதையடுத்து, ஐ.பி.சி., 354வது பிரிவின் கீழ், பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் நோக்கத்துடன் அவரை பலவந்தப்படுத்தியது மற்றும், 'போக்சோ' சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வரண காந்தா சர்மா, ஐ.பி.சி., 354வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ததை உறுதி செய்தார். அதே நேரம், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான குற்றச்சாட்டில் இருந்து மனுதாரரை விடுவித்தார். அப்போது நீதிபதி கூறியதாவது:ஒரு பெண் குழந்தையின் உதடுகளைத் தொட்டு அழுத்தும் செயல், ஐ.பி.சி., பிரிவு 354ன் கீழ் குற்ற வரம்பிற்குள் வருகிறது. குறைந்தபட்ச தொடுதல் இருந்தாலே இப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.அதே நேரம், போக்சோ சட்டப்பிரிவு 10ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய, பாலியல் நோக்கத்துடன் சிறுமியை அணுகியிருக்க வேண்டியது அவசியம்.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்துடன் சிறுமியை அணுகியதாக அவர் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை அழுத்துவது, அருகில் படுத்து உறங்குவது வன்கொடுமை ஆகாது.எனவே, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய முடியாது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் போது விசாரணை நீதிமன்றம் அதிக கவனம் கொள்ள வேண்டும். ஏனோதானோவென்று நான்கு வரிகளில் உத்தரவு பிறப்பிக்க கூடாது.இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sampath Kumar
மார் 08, 2025 13:40

சபாஷ் நல்ல தீர்ப்பு உங்க தீர்ப்பை கண்டு வியக்கிறேன் ? உங்க பொண்ணுக்கு இப்படி நடந்தால் ஏத்துக்க மாடீர்களா இல்லையா என்று சொல்லுங்கள் ?


Kanns
மார் 08, 2025 12:09

Good Unbiased Order. Atleast 50%CASES are FALSE & COOKEDUP incl Evidences/ Witnesses etc by Vested-Biased-Selfish-CONSPIRING CASE/NEWS/VOTE/POWER HUNGRY& PowerMISUSING CRIMINAL GANGS incl False Complainants Proof: SelfDeclared SAINTS When Entire Society Criminalised NEVER Booked-FIRd Defamed Arrested Prosecuted Convicted ln Same Trials. HOWEVER, GENUINECASES Must be Investigated-Tried UNBIASEDLY& Fast for PUNISHING REAL ACCUSED Not Scapegoats INCLUDING All False-Complainants& PowerMisusers in Same Trials SACK& PUNISH 95%JUDGES NOT PUNISHING SO


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 08, 2025 11:42

நீதிமன்றங்கள் நீதிபதிகள் கருத்து சொல்வதற்கு உரிமை கிடையாது. சரி தவறு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பார்வை மனதில் கிரகிக்கும் தன்மை பொறுத்து மாறுபடும். அது நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். ஆகவே நீதிமன்றங்கள் கருத்து சொல்வதை தவிர்த்து விட்டு சட்டம் மற்றும் அந்த சட்டம் எந்த கண்ணோட்டத்தில் உருவாக்கப் பட்டதோ அதே நிலையில் தான் தீர்ப்புகள் தர வேண்டும். இதற்கு முன் ஒரு பெண் நீதிபதி பெண்ணின் மார்பகங்களை தொடுவது பாலியல் குற்றம் ஆகாது என்று தீர்ப்பு கொடுத்து கடும் கண்டத்திற்கு பின்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அது போல இந்த நீதிபதியும் பணியிலிருந்து நீக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 11:34

தந்தை தனது மகளின் உதட்டைத் தொடுவதே தவறு ...... அப்படி இருக்கையில் ஒரு உறவினன் ?? உதட்டைத் தொடுவதை குட் டச் இல் சேர்க்கச் சொல்கிறாரா நீதிபதி ?? ஈவேரா வழியைப் பின்பற்றுகிறார் என்று எங்கள் கிம்ச்சை மன்னர் பெருமிதப்படலாம் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 11:24

நீதிபதியின் வீட்டுச் சிறுமிக்கு இப்படி நடந்தால் இதே போல நினைத்து குற்றவாளியை விடுவிப்பாரா ??


முருகன்
மார் 08, 2025 10:06

இப்படியே போனால் நாட்டில்..... கடும் தண்டனை தேவை


Rengaraj
மார் 08, 2025 10:03

மகளிர் மீதான மற்ற வழக்குகளுக்கு நீதிபதிகள் , அது எந்த கோர்ட் என்றாலும் பெண்களாக மட்டும் இருக்கவேண்டும். வழக்கறிஞர்கள் யார்வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான வழக்குகளுக்கு மட்டும் கீழ் கோர்ட் முதல் உச்ச நீதிமன்றம் வரை பெண் வழக்கறிஞர்கள் மட்டுமே வாதாட வேண்டும். அவர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய , மாநில மற்றும் அணைத்து நீதிமன்றங்களுக்கு உத்தரவு போட வேண்டும். பெண்களின் உளவியல் மற்றும் உடல் சார்ந்த அம்சங்கள் பாலியல் வழக்குகளில் காணப்படுவதால் பெண் வழக்கறிஞர்களால் வைக்கப்படும் வாதத்தை சரியான முறையில் பெண் நீதிபதிககள் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் . இதற்கு மத்திய அரசு இந்த மகளிர் தினத்தில் ஆவண செய்யவேண்டும்.


MUTHU
மார் 08, 2025 09:01

அதுக்கு இந்த சட்டங்களே தேவை இல்லையே. எவனும் எண்ணமும் பண்ணுன்னு விட்டுட வேண்டியதுதானே.


raja
மார் 08, 2025 08:18

அப்புறம் என்ன இனி கோவால் புற உடன் பிறப்புகளுக்கும் அவர்களின் "ஸார்" களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான் போங்க...


raja
மார் 08, 2025 08:12

ஒரு பொண்ண தொட்டாலே போச்சுன்னு சொல்லிரிவிங்க போல இருக்கு.


முக்கிய வீடியோ