உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

விஜயநகர், : எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் ஹம்பி நகர் ஹோலி ஏஞ்சல் உயர்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.பெங்களூரு விஜயநகர் ஹம்பி நகரில் உள்ளது ஐ.சி.எஸ்.சி., பாடத்திட்டம் உள்ள ஹோலி ஏஞ்சல் உயர்நிலைப்பள்ளி இருக்கிறது.நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், இப்பள்ளியை சேர்ந்த 173 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 21 பேர் 90 சதவீத மதிப்பெண்ணும்; 90 மாணவர்கள் டிஸ்டிங்க்ஷனும்; 20 மாணவர்கள் முதல் வகுப்பும் பெற்றுள்ளனர்.இவர்களில், பூர்வின சூரி, ஆகாஷ் பாட்டீல், பிரணவ், திஷா, கவுசிக் குந்தர் ஆகியோர் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பள்ளி இயக்குனர் சந்திரமோகன், முதல்வர் லோகேஷ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ