உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்?

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இதன்படி, உ.பி.,யில் இருந்து 10 பேர்; பீஹாரில் இருந்து எட்டு பேர், மஹாராஷ்டிராவில் இருந்து ஆறு பேர்; ம.பி., கர்நாடகா, குஜராத்தில் தலா ஐந்து பேர்.மேலும், ராஜஸ்தான், ஜார்க்கண்டில் தலா நான்கு பேர்; ஒடிசா, ஹரியானா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா மூன்று பேர், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா இருவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதே போல், தமிழகம், கோவா, ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல், அருணாச்சல், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் டில்லியில் இருந்து தலா ஒருவர், அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

theruvasagan
ஜூன் 10, 2024 11:47

நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சினால் வளமை. ஆனால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே. ஆகையால் 40 செ.மீ மழை பெய்தாலும் தமிழகத்தில் வறட்சிதான்.


vbs manian
ஜூன் 10, 2024 09:05

நாற்பது பெரும் பார்லிமென்டில் வெளிநடப்பு செய்து கேன்டீனில் சமோசா பரோட்டா சாப்பிடுவார்கள்.


konanki
ஜூன் 10, 2024 08:12

ஓண்ணே ஓண்ணு செயிச்சு சேட்டன் மந்திரி ஆயிட்டார். 40 ஜெயிச்சு ம் கேன்டீன் போண்டா மட்டுமே


ராது
ஜூன் 10, 2024 11:22

உங்களை தேர்ந்தெடுத்தா என்ன பண்ணுவீங்க தம்பி


ராது
ஜூன் 10, 2024 11:24

வோட்டு போட்டா போதுமா உம்முடைய எம்பியை வேலைவாங்கத் தெரியனம் - நாம் வேலை கேட்டு அவன் "கை" கரைபடிய லஞ்சம் கொடுக்கக் கூடாது - அது சரி பாராளுமன்றத்தை பார்த்திருக்கியா


Raja Gopalan C S
ஜூன் 10, 2024 08:12

40 உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் இருந்து. அசிங்கமாக இருக்கிறது ஒருவர் கூட அமைச்சர் ஆக முடியாது. திராவிடம் என்றோம் , முழுவதும் 10 வருடமாக அழிந்து வருகின்றோம். வாழ்க மணல் திருடுவது. வாழ்க பெரியார் பலன்கள் ?. அண்ணாவிற்கு நாமம் போட்ட தி.மு.க. அண்ணா திமுகவிற்கு நாமம் போட்ட மக்கள்.


konanki
ஜூன் 10, 2024 08:10

3 அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து பதவி ஏற்பு. ஆனால் 40 பேருக்கு அந்த விழாவை பார்ப்பதற்கான அழைப்பு கூட இல்லை. கூடா நட்பு கேடில் முடியும்


Kasimani Baskaran
ஜூன் 10, 2024 07:34

பலர் மூலம் தூது விட்டும் 22 எம்பிக்கள் வைத்திருக்கும் தீம்காவிலிருந்து ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பது மகா சோகமானது. இந்திக்கூட்டணி காங்கிரஸ் கூட்டணியான விரக்தியில் மூன்றாம் அணி கூட உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது.


Prince Subhash
ஜூன் 10, 2024 04:31

தமிழ்நாடு என்ற பெயரை எப்போது தமிழகம் என்று மாற்றினார்கள்?


Mubarak ali Mohammed
ஜூன் 10, 2024 05:53

சரியான கேள்வி... ஆனால் பதில் வராது.


Aaniraichelvi
ஜூன் 10, 2024 05:59

தமிழ் கண்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பு. தனித்து நிற்பவன் தமிழன். அதாவது திராவிடன்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை