உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி கொலை கணவர் கைது 

மனைவி கொலை கணவர் கைது 

தொட்டபல்லாபூர்: நடத்தை சந்தேகத்தால் சுவற்றில் தலையை மோதி, மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூர் அருகே நெரலகட்டே கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா, 45. இவரது மனைவி ராதா, 38. தம்பதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் இரவு ஒன்றாக இருவரும் மது அருந்துவது வழக்கம்.இந்நிலையில், மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு மனைவி இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி, கணவர் கதறி அழுதார். எப்படி இறந்தார் என்று கேட்ட போது, மயங்கி விழுந்து இறந்ததாக கூறி நாடகமாடினார்.ராதாவின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகளை, லட்சுமய்யாவும், அவரது குடும்பத்தினரும் அவசரம், அவசரமாக செய்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் தொட்டபல்லாபூர் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று காலை லட்சுமய்யா வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், சுவற்றில் தலையை மோதி மனைவியை கொலை செய்ததையும், கொலையை மறைக்க தவறி விழுந்து இறந்ததாக நாடகம் ஆடியதையும் ஒப்பு கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். ராதா உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை