| ADDED : ஆக 13, 2024 07:37 AM
யாத்கிர்: கர்நாடக காங்கிரஸ் அரசு, 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால், ஐந்து கிலோ அரிசி, ஐந்து கிலோ அரிசிக்கான பணத்தையும், பயனாளிகளின் வங்கி கணக்கில் டிபாசிட் செய்து வருகிறது.'அன்னபாக்யா' அரிசி, லாரியில் யாத்கிர் வழியாக கடத்தப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை ஷஹாபூரின் பீமராயனஹூன்டியில் சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த லாரியை தடுத்து, சோதனை செய்தபோது, 'அன்னபாக்யா' அரிசி இருப்பது உறுதி செய்யப்பட்டது.லாரி ஓட்டுனரிடம் விசாரித்தபோது, கலபுரகியில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாதுக்கு கொண்டு செல்லவதாக தெரிவித்தார். உணவு பொது வினியோக துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, தலா 50 கிலோ எடையுள்ள 280 மூட்டைகளை பறிமுதல் செய்து, அரசு உணவு கிடங்கில் சேர்த்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பீமராயனஹுன்டி போலீசில், உணவு பொது வினியோக துறை அதிகாரிகள் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.