மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
புதுடில்லி : ஹரியானாவில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் நடந்த பண மோசடி வழக்கில், அம்மாநில காங்., - எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வாரை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.ஹரியானாவில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள யமுனா நகர், சோனிபட் உள்ளிட்ட மாவட்டங்களில், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை மீறி, சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடந்ததாக ஹரியானா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையினர் தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய தேசிய லோக்தள கட்சியைச் சேர்ந்தவரும், யமுனா நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தில்பக் சிங் மற்றும் அவரது உதவியாளர் குல்விந்தர் சிங்கை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.மேலும், இது தொடர்பாக, சோனிபட் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வார், 55, வீட்டில், கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், சட்ட விரோத சுரங்கத் தொழிலில் நடந்த பண மோசடி வழக்கில், எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வாரை நேற்று அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஹரியானாவில் வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஊழல் வழக்கில் காங்., - எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டுள்ளது, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
4 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago