| ADDED : மே 03, 2024 07:08 AM
ஜெ.பி.நகர்: உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் ஆதரவாளர் வீட்டில், வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர். இவரது நெருங்கிய ஆதரவாளர் வேணுகோபால். பெங்களூரு ஜெ.பி.நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். தொழில் அதிபரான வேணுகோபால், சில தொழில்கள் செய்கிறார். அவர் சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்று, வருமான வரி அதிகாரிகளுக்கு தெரிந்தது.இதையடுத்து நேற்று காலை வேணுகோபால் வீட்டிற்கு சென்ற, வருமான வரி அதிகாரிகள் 10 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். ஆவணங்களை சரிபார்த்து அதற்கு விளக்கம் கேட்டனர். அதன்பின்னர் சில ஆவணத்தை எடுத்து சென்றனர்.இதுகுறித்து வேணுகோபால் கூறுகையில், ''என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்களுக்கு என் வீட்டில் எதுவும் சிக்கவில்லை,'' என்றார்.