கால்நடைகள் இறந்தால் நிவாரணம் அதிகரிப்பு
* கால்நடைகள் இறந்தால், 'அனுகிரஹா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பசுக்கள், எருமைகள், காளைகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் 10,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாகவும்; ஆடுகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் 5,000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாகவும்; மூன்று முதல் ஆறு மாத ஆட்டுக்குட்டிகளுக்கு வழங்கும் நிவாரணம் 3,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.* கடந்த இரண்டு ஆண்டுகளில், 60 புதிய கால்நடை சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டன. 2025 - 26ம் ஆண்டில் 50 புதிய கால்நடை சிகிச்சை மையங்கள் திறக்கப்படும்.* நபார்டு உதவியுடன் 100 கால்நடை மருத்துவமனைகளுக்கு கட்டடம்.* அம்ருத் மஹல் இன பசுக்களுக்கு தீவனம் கிடைக்க செய்யும் நோக்கில், வனத்துறை மற்றும் நரேகா ஒருங்கிணைப்பில் தீவன மரங்கள் வளர்க்கப்படும்.* ஹள்ளிகார், கிலாரி, அம்ருத் மஹல், பன்டூர் ரக மாடுகளை பாதுகாக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.* இயற்கை சீற்றத்தின் போது, பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஆடு மேய்ப்பவர்களுக்கு கர்நாடக கால்நடைத்துறை, மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பில் பயிற்சி அளிக்கப்படும்.* 'நந்தினி' பிராண்ட் மார்க்கெட்டை விஸ்தரித்து, தேசிய, சர்வதேச அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. 2024 - 25ம் ஆண்டில் தினமும் 1 கோடி லிட்டருக்கும் அதிகமான பால் உற்பத்தியானது.