உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டாதீங்க: மத்திய அரசை சாடிய சித்தராமையா

நிதி வழங்குவதில் பாகுபாடு காட்டாதீங்க: மத்திய அரசை சாடிய சித்தராமையா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது' என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.பெங்களூருவில் சுதந்திர தின விழாவில், சித்தராமையா பேசியதாவது: மாநிலங்களின் வளர்ச்சிக்கு நியாயமான மானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல், வாக்காளர்களின் அரசியல் புத்திசாலித் தனத்தை பிரதிபலிக்கிறது. ஜனநாயகம் யாருடைய கைப்பாவையாக இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

அரசியல் ஜனநாயகம்

அரசியலமைப்புச் சட்டங்களைப் புறக்கணிப்பதன் மூலம், மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய நிதிப் பங்கைத் தாமதப்படுத்தும் போக்கு உள்ளது. இது மக்களின் நலன் அல்ல. துரதிர்ஷ்டவசமாக, மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு உரிய பங்கைப் பெற சட்டப்பூர்வ உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் எண்ணம் கொண்டவர்கள், அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். சமூக ஜனநாயகம் இல்லாமல், அரசியல் ஜனநாயகம் வாழ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தாமரை மலர்கிறது
ஆக 15, 2024 19:42

தமிழர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போடாததால், காவேரி தண்ணீர் காமராஜ்க்கு பிறகு தமிழகத்திற்கு கொடுக்கப்படவில்லை. மாறாக தமிழகத்தின் பங்கை கர்நாடகாவிற்கு மத்திய அரசு கொடுத்தது. அதற்கு சுப்ரிம் கோர்ட்டும் தாளம் மட்டும் தான் போட முடியும். ஒட்டு போடாதவர்களுக்கு பாரபட்சம் என்பது எப்போதும் இருக்கும் தான். மத்திய அரசின் கருணை பார்வை தமிழகத்தின் மீது படவேண்டும் என்று எண்ணி இருந்தால், நாற்பதுக்கு நாற்பதும் பிஜேபிக்கு கிடைத்து இருக்க வேண்டும். எய்ம்ஸ் வேண்டாம், ரயில்வே வேண்டாம், நிதி வேண்டாம், தண்ணீர் வேண்டாம் என்று தென்னகம் முடிவெடுத்தால், பிஜேபிக்கு ஒட்டு போடவேண்டாம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 18:53

மதங்களிடையே பாகுபாடு பார்த்து ஒரு மதத்தினருக்கு மாத்திரம் எல்லாம் செய்வியாம் , இதில்...


Kumar Kumzi
ஆக 15, 2024 17:04

பங்களாதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிச்சியா? இந்துக்களின் சொத்துக்களை கொள்ளையடிச்சி வச்சிருக்கும் waquf வாரியத்துக்கு ஆதரவு கொடுக்கும் ஒனக்கு இந்துக்களின் பணம் எதற்கு?


ganapathy
ஆக 15, 2024 13:37

நீதானே தேர்தல் டயத்துல முக்காட பிரச்சனையாக்கி 5 மந்திரி பதவிகள் தரேன்னு முஸ்லீமுக்கு அவனுங்க கேக்காமலேயே வாக்குறுதி கொடுத்த? பேசாம அதே முக்காட போட்டுகினு எங்கனாச்சும் ஓடிப்போயிரு. கர்நாடக மக்கள் பொழச்சுப்பாங்க


Suppan
ஆக 15, 2024 13:35

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளிக்கொடுத்து விட்டு கஜானாவைக் காலி செய்துள்ளீர்கள். இப்பொழுது அன்றாட செலவுகளுக்குப் பணமில்லை என்று அழுகிறீர்கள். பொறுப்பான ஆட்சியாய் இல்லை. நீங்கள் ஒட்டு பெறுவதற்காக மத்திய அரசு எதற்குப் பணம் கொடுக்க வேண்டும்


கூமூட்டை
ஆக 15, 2024 13:02

சீ மாடல் அதான் இல்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 15, 2024 12:40

நீங்க சுருட்டுவதற்கு நிதி கொடுத்தாலும் மத்திய அரசுக்கு நல்ல சர்ட்டிபிகேட்டா கொடுக்கப்போறீங்க ?? அநேகமா டவுட் தனபாலுக்கு இந்த டவுட் வரும் ....


ஆரூர் ரங்
ஆக 15, 2024 12:38

மசூதிகள், மதரசா,சர்ச் கட்ட ஏழைகளின் வரிப்பணத்தைக் கொடுத்து விட்டு அப்புறம் பற்றாக்குறைன்னு புகார். அதெல்லாம் அரசின் வேலையா?சரி..ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு பத்தி இப்போ பேசுறதில்லியே ஏன்?


A Viswanathan
ஆக 15, 2024 12:29

இவர் பாகு பாடு காட்டாதீர்கள் என பேசுகிறார்.ஒட்டிற்காக எத்தனை பாகுபாடு காட்டுகிறார் இவர் கர்நாடக பெரும்பான்மை மக்களிடம்.


Vadivelan Dhamodiran
ஆக 15, 2024 13:44

உங்ளிடமும் ஸ்டாலினிடமும் இரண்டு மாநிலமும் அகப்பட்டு தின்டாடுது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை