உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய ராணுவம் திறமையாக செயல்படுகிறது: புதிய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பெருமிதம்

இந்திய ராணுவம் திறமையாக செயல்படுகிறது: புதிய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய ராணுவம் திறமையாக செயல்படுகிறது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேற்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். தொடர்ந்து ராணுவ நடைமுறைகளின் படி புதிய தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்றார். அவர் இன்று (ஜூலை 01) ராணுவ தலைமை அலுவலகத்தில் முறைப்படி, பணிகளை துவக்கினார்.முன்னதாக, அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில், உபேந்திர திவேதி கூறியதாவது: இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது பெருமை அளிக்கிறது. இந்திய ராணுவத்தின் பெருமைமிக்க பாரம்பரியம், நமது ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் பங்களிப்பு பெரியது. பணியில் ஈடுபட்டிருந்த போது, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

நவீனமயமாக்கல்

நவீன ஆயுதங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் போர் முறைகளையும், உத்திகளையும் மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவம் நவீனமயமாக்கல் பாதையில் முன்னேறி வருகிறது. இந்திய ராணுவம் திறமையாக செயல்படுகிறது. அனைத்து இந்தியர்களுக்கும், நான் உறுதியளிக்கிறேன். அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைப்பு

2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த தேசத்தை கட்டியெழுப்புவதில், நாம் ஒரு முக்கிய தூணாக மாற முடியும். நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை