வாசகர்கள் கருத்துகள் ( 2 )
but it is good movie
ஆஸ்கர் விருது வாங்குறதுக்கு நல்ல கதையம்சம் இருந்தா போதும் என்பது சராசரி இந்திய இயக்குனர்கள், ரசிகர்களின் முடிவு...... லிப்லாக் இருந்தா போதும் என்பது அறிவு ஜீவியான கமல்ஹாசனின் முடிவு .....
நியூயார்க்; ஆஸ்கர் விருதுகள் 2025ம் ஆண்டுக்கான பட்டியலில் இருந்து, இந்தியாவின் அதிகாரப்பூர்வ பங்கேற்பாக அறிவிக்கப்பட்ட லாபட்டா லேடீஸ் என்ற படம் வெளியேறி உள்ளது.சர்வதேச திரையுலகில் சிறந்த படைப்புகளை கவுரப்படுத்தி ஆஸ்கர் விருது பல பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக படமான லாபட்டா லேடீஸ் என்ற படம் தேர்வாகி அனுப்பப்பட்டது. இந்த படத்தை கிரண் ராவ் இயக்கி உள்ளார். கடந்த மார்ச்சில் வெளியான இப்படம், ஒரே ரயிலில் பயணிக்கும் புதியதாக திருமணமான 2 பெண்கள் தவறுதலாக வெவ்வேறு மணமகன் இடங்களுக்கு சென்றுவிடுவதால் ஏற்படும் குழப்பங்கள் உள்ளிட்டவற்றை சொல்கிறது. வித்தியாசமான கதைக்களம், பாத்திரங்கள் வடிவமைப்பு என ரசிகர்கள் இடையே இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் இருந்து லாபட்டா லேடீஸ் படம் அதிகாரப்பூர்வ நுழைவுப் பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்தோஷ் என்ற மற்றொரு இந்தி படம் சிறந்த வெளிநாடுடு திரைப்படத்துக்கான பிரிவில் இடம் பெற்றுள்ளது.
but it is good movie
ஆஸ்கர் விருது வாங்குறதுக்கு நல்ல கதையம்சம் இருந்தா போதும் என்பது சராசரி இந்திய இயக்குனர்கள், ரசிகர்களின் முடிவு...... லிப்லாக் இருந்தா போதும் என்பது அறிவு ஜீவியான கமல்ஹாசனின் முடிவு .....