உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குட் நியூஸ் கொடுத்தது இண்டிகோ; செப்.,1 முதல் சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை

குட் நியூஸ் கொடுத்தது இண்டிகோ; செப்.,1 முதல் சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோர், விமானத்தில் செல்வதாக இருந்தால் கொழும்பு தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தாலும், கொழும்பு சென்று தான் செல்ல வேண்டிய நிலை முன் இருந்தது.இதற்கு தீர்வாக, யாழ்ப்பாணத்துக்கு காலை வேளையில் 'அலையன்ஸ் ஏர்' நிறுவனம் விமான சேவையை துவங்கியது. இந்த விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, தினமும் பிற்பகலில் சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை செப்டம்பர் 1ம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் துவங்க உள்ளது. பயணக்கட்டணம் ரூ.7,604 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விமான சேவை நேரம்

சென்னையில் பகல் 1.55 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். மாலை 3.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும். 75 நிமிடத்தில் விமானம் சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
ஆக 06, 2024 12:59

நம் வட இலங்கையையும் யாழ்பானத்தயியும் அங்குள்ள தமிழர்களையும் சென்று பார்த்து வரலாம்


P. VENKATESH RAJA
ஆக 06, 2024 10:11

விமான சேவை துவங்கினால் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை