மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
ஜம்மு: சிந்துநதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் உள்ள நீர்மின் திட்டங்களை நடுநிலை நிபுணர்கள் குழு முன்னிலையில், இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இமயமலைத் தொடரின் கைலாஷ் மலையில் மேற்கு திபெத் பகுதியில் உருவாகும் சிந்து நதி ஆசியாவின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாக உள்ளது. இது லடாக் வழியாக பாய்ந்து, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் வடக்கு பகுதிகள் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கிறது. இந்த நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே, 1960ல் சிந்துநதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டது.குற்றச்சாட்டுசிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்கு பகுதி ஆறுகள் என்றும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்கு பகுதி ஆறுகள் என்று பிரிக்கப்பட்டன. கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது.இதற்கான இழப்பீடும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே சிந்துநதி நீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை என இந்தியா குற்றஞ்சாட்டியது. உலக வங்கியின் தலையீட்டை அடுத்து, 2022ல் இரு நாடுகளுக்கும் பொதுவான நடுநிலை நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, சிந்துநதி நீர் ஒப்பந்த செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடுநிலை நிபுணர்கள் நடத்திய கூட்டத்தில் சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. நீர்மின் திட்டம்இதையடுத்து, இரு நாடுகளிலும் உள்ள நீர்மின் திட்டங்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. இதன்படி, இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் நடுநிலை நிபுணர்கள் அடங்கிய 40 பேர் குழு, ஜம்முவில் உள்ள கிஷ்துவார் பகுதிக்கு நேற்று சென்றனர். செனாப் பள்ளத்தாக்கில் கட்டுமானப் பணியில் இருந்த பல்வேறு நீர்மின் திட்டங்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.பின், 85 மெகாவாட் திறன் உடைய ராட்டில் நீர்மின் திட்டம், மருசுதார் நதியில் உள்ள 1,000 மெகாவாட் பகல் துல் நீர்மின் திட்டம் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். தற்போதைய ஆய்வால், நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிந்துநதி நீர் ஒப்பந்தப் பணிகள் துவங்கியுள்ளன.
1 hour(s) ago