உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை பள்ளங்கள் மூடும் பணி தீவிரம்; மாநகராட்சி கமிஷனர் நள்ளிரவில் ஆய்வு

சாலை பள்ளங்கள் மூடும் பணி தீவிரம்; மாநகராட்சி கமிஷனர் நள்ளிரவில் ஆய்வு

மடிவாளா : தீவிரமாக நடந்து வரும் சாலைப் பள்ளங்கள் மூடும் பணிகளை பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், நள்ளிரவில் ஆய்வு செய்தார்.பெங்களூரில் ஏற்பட்டுள்ள சாலைப் பள்ளங்களை மூடுவதற்கு, துணை முதல்வர் சிவகுமார் 15 நாட்கள் கெடு விதித்தார். தற்போது அவர் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.அங்கிருந்து, நாளை பெங்களூரு திரும்புகிறார். அதற்குள் சாலைப் பள்ளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் கறாராக கூறி இருந்தார்.அதிகாரிகளும் துரிதமாக பள்ளங்கள் மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பகல், இரவு பாராமல் அனைத்து மண்டலங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன.இதற்கிடையில், ஓசூர் சாலையின் மடிவாளா, சில்க் போர்டு பகுதிகளில் அதிகமாக பள்ளங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டன. அந்த பகுதியில், நேற்று முன் தினம் இரவு பள்ளங்கள் மூடும் பணிகள் நடந்தன.அந்த பகுதியில், மாநகராட்சி கமிஷனர் துஷார்கிரிநாத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சில்க் போர்டு சதுக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 4 சர்வீஸ் சாலைகளில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், பள்ளங்கள் மூடும்படி அறிவுறுத்தினார்.மழை பெய்யும்போது அடிக்கடி தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், அந்த பகுதியில், தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.சில்க் போர்டு மெட்ரோ ரயில் நிலையம் முன்பு, பாதாள சக்கடை நிரம்பி வழிந்தது. இதை பார்த்து கோபமடைந்த தலைமை கமிஷனர், உடனடியாக சரி செய்யும்படி கூறினார்.முன்னதாக இங்கு வருவதற்கு முன், ஈஜிபுரா மேம்பால பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, தலைமை கமிஷனர் திடீர் ஆய்வு நடத்தியதால், அதிகாரிகள், ஊழியர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை