மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
ராஞ்சி, “அரசியலில் இருந்து விலக மாட்டேன்; புதிய பாதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளேன்,” என, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் நேற்று தெரிவித்தார். ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். பின், ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இதனால், சம்பாய் சோரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், அவர் பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும், இதற்காக தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேருடன் டில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் கடந்த 18ம் தேதி செய்திகள் வெளியாகின. ஆனால், அதே நாளில் கட்சியில் பல்வேறு அவமரியாதைகளை சந்தித்ததால், மாற்று வழியை தேர்ந்தெடுக்க உள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:என் மனதில் பட்டதையும், என் அனுபவத்தையும் நான் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டேன். இது தொடர்பாக கட்சியினர் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இது ஜார்க்கண்ட் நிலம். என் மாணவப் பருவம் முதல், கட்சித் தலைவர் சிபு சோரன் தலைமையில் நான் இந்த மாநிலத்தின் உரிமைக்காக போராடி வருகிறேன். இதுவரை நடந்தது, என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம்; அது முடிந்துவிட்டது.இது என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம். என்னை பின்பற்றுவர்களிடம் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் கிடைத்தால், அரசியலை விட்டு நான் விலக மாட்டேன். ஒரு புதிய அணியை உருவாக்கி, அதில் பயணிக்க திட்டமிட்டுள்ளேன். அதே சமயம் ஒருமித்த கருத்து உடைய அமைப்பு கிடைத்தால், அதனுடன் கைகோர்க் கவும் முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 4