உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவராமன் மரணத்தில் சதி இருக்குமோ; சந்தேகம் கிளப்புகிறார் அண்ணாமலை

சிவராமன் மரணத்தில் சதி இருக்குமோ; சந்தேகம் கிளப்புகிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுவதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

உயிரிழப்பு

பர்கூரில் தனியார் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலி என்.சி.சி. பயிற்றுநர் கைது செய்யப்பட்டார். நேற்று இவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அதேவேளையில், நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் சிவராமனின் தந்தையும் உயிரிழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oorqzsi9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சந்தேகம்

இந்த நிலையில், சிவராமன் மற்றும் அவரது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

முக்கிய புள்ளிகள்

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

விசாரணை

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

lana
ஆக 23, 2024 22:30

அதையும் அவர் கண்டு பிடிக்க வேண்டும் என்றால் உங்கள் போலீஸ் எதற்காக. சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் போடும் ஆட்கள் ஐ பிடித்து குண்டா சட்டம் போடவா . போலீஸ் ஐ கலைத்து விடுங்கள். வரிப்பணம் மிச்சம்


lana
ஆக 23, 2024 22:25

தலா பாதி எப்படி அப்படி தான் எல்லாம். ஒரு நாச்சியப்பன் பாத்திர கடை கப் கொண்டு வந்து முதல்வர் மற்றும் சிறு சு கிட்ட காட்டி ஏமாற்ற முடியும் எனில் இது ஏன் போலி ncc camp நடத்த முடியாது. இதுக்கு தான் திராவிட மாடல் என்று பெயர்


theruvasagan
ஆக 23, 2024 17:42

கொல்கத்தாகாரனுகளுக்கு இந்த எலிபேஸ்ட் டெக்னிக் தெரியாதோ.


skrisnagmailcom
ஆக 23, 2024 16:49

பாம்பின் கால் பாரம்பறியும் அண்ணாமலையும் காவல் துறையில் பணியாற்றியவர் அவரே அவருடைய சோர்ஸ் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும்


venugopal s
ஆக 23, 2024 16:19

என்ன இருந்தாலும் போலீஸ்காரர் புத்தி அப்படித்தானே இருக்கும்! பாதிக்கப்பட்டு கம்ப்ளைண்ட் கொடுக்க காவல்நிலையம் வந்தால் அவரையே சந்தேகப்பட்டு உள்ளே தூக்கி வைக்கும் போலீஸாக இருந்தவர் தானே!


kulandai kannan
ஆக 23, 2024 15:17

அந்தப் பள்ளியின் பெயர் என்ன?


Ram pollachi
ஆக 23, 2024 13:14

பொள்ளாச்சி பாலியல் வழக்குக்கு வயசு என்னாச்சு! மக்களின் உணர்வுடன் விளையாடுவதே அரசியல்வாதிகளின் வேலையாகி விட்டது. தலைவன் ஊதினால் தொண்டன் சிக்குவான்.


Svs Yaadum oore
ஆக 23, 2024 13:10

ஒரு பள்ளியில் NCC officer என்றால் ஒழுக்கமாக சமூகத்தில் மரியாதையுடன் ராணுவ கட்டுப்பாடுடன் மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பார் ....இந்த விடியல் திராவிடனுங்க ஆட்சியில் அதுவும் மொத்தமாக சீரழிந்து இப்போது இவ்வளவு படு கேவலமாக உள்ளது ... ரோட்டில் போறவன் NCC கேம்ப் நடத்த அனுமதி கேட்டாலும் அதுக்கும் விடியல் ஆட்சியில் அனுமதி கிடைக்கும் ...


அப்பாவி
ஆக 23, 2024 12:52

ஐ.பி.எஸ் தானே... துப்பறிஞ்சு கண்டு பிடிக்கலாமே. அரசியல் ஸ்டண்ட் அடிப்பதை நிறுத்துங்க.


Mettai* Tamil
ஆக 23, 2024 14:29

அப்பாவித்தனமா கேள்வி கேக்குறீங்க , ஐ.பி.எஸ் தானே... துப்பறிஞ்சு கண்டு பிடிக்கலாமே........ கேச அவர்கிட்ட கொடுங்க கண்டுபிடிக்கலாம் ......


Anand
ஆக 23, 2024 12:40

இந்த சம்பவத்தில் மதமாரிகளின் பெயர் அடிபட்டதே? இனி அவர்கள் உத்தமர்களாகி விடுவார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை