உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாலிபரை அடித்துக் கொன்ற ரிக்ஷா டிரைவருக்கு வலை

வாலிபரை அடித்துக் கொன்ற ரிக்ஷா டிரைவருக்கு வலை

ஜெய்ப்பூர்:மின் ரிக்ஷா மீது ஸ்கூட்டர் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சுவாமி பஸ்தியைச் சேர்ந்த தினேஷ் சுவாமி மற்றும் ஜிதேந்திர சுவாமி ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் சென்றனர்.சாஸ்திரி நகரில் மின் ரிக்ஷா மீது ஸ்கூட்டர் மோதியது. இதையடுத்து, மின் ரிக்ஷா டிரைவருக்கும் தினேசுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. மின் ரிக்ஷா டிரைவர் மற்றும் சிலர் சேர்ந்து தினேஷை சரமாரியாகத் தாக்கினர். பின், அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றனர்.ஆனால்,வீட்டுக்கு வந்த தினேஷ் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், இ-ரிக்ஷா டிரைவர் மற்றும் அவர்து நண்பர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ