உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப்.30-க்குள் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் தீவிரம்

செப்.30-க்குள் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் தீவிரம்

புதுடில்லி: வரும் செப்டம்பர் கடைசி வாரத்திற்குள் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆக.05 ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.கடந்த மாதம் கார்கில் சென்றிருந்த பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் எனவும்,மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது . இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஜம்முகாஷ்மீர் செல்ல உள்ளது. முன்னதாக இங்கு மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு உயரதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தவிர சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள மஹாராஷ்டிரா, ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் அரசு உயரதிகாரிகளை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை