உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்திரிகை நிருபர் சுட்டுக்கொலை; உ.பி.,யில் அதிர்ச்சி

பத்திரிகை நிருபர் சுட்டுக்கொலை; உ.பி.,யில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பத்திரிகை நிருபர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பத்திரிகை நிருபரான ராகவேந்திரா பாஜ்பாய், சிதபூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். கீழே விழுந்த பாஜ்பாயை துப்பாக்கியால் இருமுறை சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார். நெஞ்சு மற்று தோள்பட்டை பகுதியை குண்டு துளைத்த நிலையில், அவர் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு உடனடியாக நேரில் சென்றுள்ளனர். பின்னர், பாஜ்பாயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராகவேந்திரா பாஜ்பாய்க்கு ஒரு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழன்
மார் 08, 2025 22:20

உபிஸ் புல்டோசர் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா இப்படியெல்லாம் நடக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யமே


N Sasikumar Yadhav
மார் 09, 2025 01:35

மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை நிருபராகளூடன் சேர்த்து எரித்த வரலாறு தமிழக திராவிட மாடல் கட்சிக்கு இருக்கிறது . எதிலுமே திருட்டு திராவிட மாடல்தான் முன்னோடி


முருகன்
மார் 08, 2025 21:53

சட்டம் ஒழுங்கு சரியில்லை


Ray
மார் 08, 2025 21:15

இப்பதானே தெரியுது நம்ம ஊர் பத்திரிகைகள் ஏனிப்படி அஞ்சி நடுங்குகிறார்களென்று. அதுதான் துப்பாக்கி என்று துப்பு துலங்கிவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை