மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 4
மும்பை: மஹா.,வரும் ஜூலை12-ல் நடைபெற உள்ள சட்டமேலவை தேர்தலில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.,தலைமையிலான மகா யுதி கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. மகா விகாஸ் அகாதி பெயரில் இந்தியா கூட்டணி உள்ளது.மகாயுதி அணியில் பா.ஜ., ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமயிலான தேசியவாத காங்., உள்ளது.மகா விகாஸ் அகாதி அணியில் சரத்பவார் கட்சி, மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்.,கட்சி ஆகியவை உள்ளன.நாட்டில் தற்போது நடந்து முடிந்த லோக்சபா பொது தேர்தலில் மாநிலத்தில் உள்ள 48 எம்.பி தொகுதகளில் மகா யுதி அணி 17 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் மகாவிகாஸ் அகாதி அணி 31இடங்களில் வெற்றி பெற்றது. இச்சூழ்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க இரு தரப்பு அணியினரும் தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் மாநில சட்டமேலவைக்கு 15 இடங்கள் வரையில் காலியாக உள்ளது. காலி இடங்களை நிரப்புதவற்காக வரும் ஜூலை மாதம் 12 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எந்த அணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் காலியாக உள்ள 15 இடங்களில் 4 இடங்கள் பட்டதாரிகள், மற்றும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும். மீதமுள்ள 11 இடங்களுக்கான தேர்தல் ஜூலை 12-ம் தேதி நடைபெறும். என தெரிவித்து உள்ளது.தற்போதைய நிலையில் மாநிலத்தில் ஆளும் என்.டி.ஏ., கூட்டணி பலம்பொருந்தியதாக இருந்தாலும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவும் இதிலும் எதிரொலிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பா.ஜ., சார்பில் 4 பேர், காங்.,சார்பில் 2, தேசியவாத காங்., ஏக்நாத்சிவசேனா, உத்தவ் சிவசேனா, தொழிலாளர்கட்சி, மற்றும் ராஷ்டீரிய சமாஜ் பார்ட்டி ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒன்று என மொத்தம் 11 பேர் ஓய்வு பெறுகின்றனர். இந்தாண்டு அக்டோபரில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 hour(s) ago | 4