மேலும் செய்திகள்
கேரளாவில் ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: கடத்தல் குருவிகள் கைது
3 hour(s) ago | 2
சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு சிக்கல்!
4 hour(s) ago | 10
பங்கார்பேட்டை : கன்னட ரத யாத்திரை நேற்று பங்கார்பேட்டையில் நடந்தது.மைசூர் சமஸ்தானமாக இருந்ததை, கர்நாடகா என பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, கர்நாடக அரசு பொன் விழாவாக கொண்டாடி வருகிறது. மாநிலம் முழுதும் கன்னட ரத யாத்திரை நடத்தப்படுகிறது.கோலார் மாவட்டத்தில் ஆறு தாலுகாகளிலும் கன்னட ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதில் சீனிவாசப்பூர், முல்பாகல், தங்கவயல் முடித்து நேற்று பங்கார்பேட்டைக்கு ரத யாத்திரை சென்றது. இன்று மாலுார் மற்றும் கோலார் செல்கிறது.பங்கார்பேட்டையில் தாலுகா நிர்வாகம், டவுன் சபை, கன்னட சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ரத யாத்திரையை வரவேற்றன. தாசில்தார் ரஷ்மி, டவுன் சபை தலைமை அதிகாரி சத்திய நாராயணா, தாலுகா பஞ்சாயத்து தலைமை அதிகாரி ரவிகுமார் உட்பட அரசு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள், கன்னட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.
3 hour(s) ago | 2
4 hour(s) ago | 10