உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரெம்மா டபுள் கேம் பா.ஜ.,வினர் கொதிப்பு

கரெம்மா டபுள் கேம் பா.ஜ.,வினர் கொதிப்பு

ராய்ச்சூர்: தேவதுர்கா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரெம்மா, தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காமல் பார்த்து கொண்டதில், காங்கிரஸ் தலைவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ராய்ச்சூரின், தேவதுர்கா தொகுதியில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்ட கரெம்மா வெற்றி பெற்றார். பா.ஜ., வேட்பாளர் சிவனகவுடா நாயக்கை தோற்கடித்தவர். அவ்வப்போது பா.ஜ., தலைவர்களை விமர்சித்து வந்தார்.லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, கரெம்மா ஆட்சேபனை தெரிவித்தார். இதை பொருட்படுத்தாமல், கட்சி மேலிடம் கூட்டணி வைத்து கொண்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், பிரசாரத்திலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பின் ம.ஜ.த., மேலிடத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் பெயரளவுக்கு தலை காண்பித்தார்.கரெம்மாவை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க, காங்கிரசார் முயற்சித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்., தலைவர் ராகுல், ராய்ச்சூருக்கு வருவதற்கு முதல் நாளன்று, அமைச்சர் போசராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் பசவராஜ் பாட்டீல் ஆகியோர், கரெம்மாவை சந்தித்து பேசினர். இவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.இது பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தர்மத்தை மறந்து, கரெம்மா, 'டபுள் கேம்' ஆடுகிறார் என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை