உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா தமிழர் மாநாடு: எஸ்.டி.குமார் அறிவிப்பு

கர்நாடகா தமிழர் மாநாடு: எஸ்.டி.குமார் அறிவிப்பு

பெங்களூரு: ''கர்நாடக தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழர் மாநாடு நடத்தப்படும்,'' என்று கன்னடர் - தமிழர் ஒற்றுமை ஆலோசனை கூட்டத்தில் அதன் அமைப்பாளர் எஸ்.டி.குமார் அறிவித்தார்.பெங்களூரு ஹலசூரு ஏரி அருகில் உள்ள யாதவ சங்க அரங்கில் நேற்று தமிழர் ஒற்றுமை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அதன் அமைப்பாளர் எஸ்.டி. குமார் பேசியதாவது:கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் ஜாதி, மதம், கட்சி, என பிரிந்து கிடக்கிறோம். தமிழ் உணர்வால் நாம் ஒருங்கிணைய வேண்டும். அதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கர்நாடகாவில் 17 மாவட்டங்களில் கணிசமான தமிழர்கள் உள்ளனர். இம்மாவட்டங்களுக்கும்சென்று, தமிழர் ஐக்கியத்தை வளர்க்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.கல்வி,சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் கர்நாடக தமிழர்கள் பின்தங்கியுள்ளதை நாம் அறிவோம். சிங்கப்பூர், மலேஷியா நாடுகளில் உள்ள தமிழர் போல், கர்நாடகாவில் தமிழர் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். நம் பலம், ஒற்றுமையில் உள்ளது. இக்கூட்டத்திற்கு மைசூரு, தங்கவயல்தமிழ் அமைப்பினர் மற்றும் பெங்களூரில் உள்ள பல தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.கர்நாடக தமிழர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தஅனைவரின் ஒத்துழைப்புடன், கர்நாடக தமிழர் மாநாடு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடத்தப்படும்.இம்மாநாடு ஜாதி, மத, அரசியல் சார்பற்ற தமிழர் நலம் காக்கும் வாழ்வுரிமை இயக்கமாக இருக்கும். இதற்கு தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பு மிக அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.தனியார் கல்லுாரி முதல்வர் சிவகுமார்,பெங்களூரு தமிழ் மன்ற தலைவர் ஆர்.பாஸ்கரன், ஆதர்ஷ் ஆட்டோ சங்க செயலர் சம்பத், கர்நாடக தமிழர் இயக்கத் தலைவர் செந்தில் குமார், ராஜகுரு, கோபிநாத், தி.சு.இளங்கோவன், ராஜேந்திரன், பையப்பனஹள்ளி ரமேஷ் உட்பட பலர் பேசினர்.அப்போது, 'தமிழருக்கு கூட்டுறவு வங்கி வேண்டும். தமிழர்களான பலருக்கு, தமிழ் படிக்க தெரியவில்லை. வீட்டில் உள்ளவர்கள்பிள்ளைகளுக்கு தமிழில் படிக்க கற்று தரவேண்டும். ஒரு கோடி தமிழர்கள் இருந்தும் அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லை. அரசியல் கட்சிகளும் தமிழர்களை மதிப்பதில்லை. எனவே, ஒரு குடையின் கீழ் தமிழர்கள் ஒருங்கிணைந்தால் மட்டுமே தமிழர் நல உரிமைகளை மீட்க முடியும்' என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி