உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சார்ஜிங் மையங்கள் கர்நாடகா முதலிடம்

சார்ஜிங் மையங்கள் கர்நாடகா முதலிடம்

பெங்களூரு: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை, அதிக எண்ணிக்கையில் வைத்துள்ள மாநிலங்களின் பட்டியலில், கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் தத்தளிக்கின்றனர். பலரும் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காண்பிக்கின்றனர். பெங்களூரு, மங்களூரு, மைசூரு, துமகூரு உட்பட, பல்வேறு நகரங்களில் எலக்ட்ரிக் வாகன விற்பனை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் செய்து கொள்ள வசதியாக, சார்ஜிங் பாயின்டுகளை பெஸ்காம் அமைத்துள்ளது. மிக அதிகமான சார்ஜிங் பாயின்ட் வைத்துள்ள மாநிலங்களில், கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது.இது குறித்து, 'பீரோ ஆப் எனர்ஜி எபிஷியன்சி' என்ற அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கைப்படி மாநிலத்தில் 5,765 பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் உள்ளன. இதன் மூலம், மிக அதிகமான சார்ஜிங் மையங்கள் வைத்துள்ள மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவுக்கு கிடைத்துள்ளது.பொது எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் கொண்டுள்ள மாநிலங்களின் பட்டியலில், கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, இந்த சாதனையே சிறந்த உதாரணம். அது மட்டுமின்றி மாநிலத்தின் மின்சார வாகனங்களுக்கான கொள்கையும், எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளர்களுக்கு உதவியாக உள்ளது.- கே.கே.ஜார்ஜ், அமைச்சர், மின்துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை