உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 நாளில் ராஜினாமா; டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

2 நாளில் ராஜினாமா; டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

புதுடில்லி: ''அடுத்த 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன்,'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் கெஜ்ரிவால் இப்போது தான் ஜாமினில் விடுதலையாகி உள்ளார். கைது செய்யப்பட்டபோதும், சிறையில் இருந்தபோதும், பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கெஜ்ரிவால், இப்போது ஜாமினில் விடுதலையாக உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tzecj6ra&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கடவுளுக்கு நன்றி!

டில்லியில் இன்று(செப்.,15) கட்சி தொண்டர்கள் மத்தியில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: கஷ்ட காலங்களில் எங்களுடன் இருந்த கடவுளுக்கு மிக்க நன்றி. பெரிய எதிரிகளுடன் போரிட்டுள்ளோம். நமது கட்சி தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், அமானதுல்லா கான் இன்னும் சிறையில் உள்ளார்கள். அவர்கள் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என நம்புகிறேன். இன்னும் 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளேன். 2 நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.

தேர்தல் சந்திக்க தயார்

முதல்வர் பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். நவம்பரில் மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுடன் டில்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளேன். நான் நேர்மையானவன் என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். நான் நேர்மையானவன் என என கருதினால் மக்கள் எனக்கு ஓட்டளிக்கட்டும். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு தான், முதல்வர் நாற்காலியில் அமர்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுக்கு மகிழ்ச்சி

ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பேசியதாவது: மதுபான ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ., பொய் வழக்கு பதிந்துள்ளது. ஆனால் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி அதற்கு முடிவு வழங்கி உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான முடிவு. டில்லி சட்டசபை தேர்தல் வரை அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jay
செப் 15, 2024 15:14

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போதும் கடந்த தேர்தலில் டில்லி மக்கள் அவர்களுக்கு ஒரு தொகுதியில் கூட எம்பி கொடுக்கவில்லை. அதிலிருந்தே தெரிகிறது, மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்திருப்பார் என்று நம்புகிறார்கள். அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தும் பொழுது அந்த போராட்டத்தில் சந்தடி கேப்பில் புகுந்து ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் அப்பட்டமான ஊழல் செய்தும், திமுக போன்ற ஊழலில் ஊற்று கண்ணாக இருக்கக்கூடிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்ததும் தெரிந்து விட்டது ஆம் ஆத்மி ஊழலுக்கு எதிரான கட்சிகள் என்பதெல்லாம் வெறும் நாடகம் தான்.


HoneyBee
செப் 15, 2024 14:56

என்னா நடிப்புடா சாமி. கொஞ்சம் அடிமைகள் இருக்கும் வரை ஹரியானா என்ன ஹிரோஷிமா கூட வெல்வார். இவன் இனி எந்த நாளிலும் எழமுடியாது. எல்லாம் நடிப்பு


Sudha
செப் 15, 2024 14:02

சிறந்த முடிவு சிசோடியாவை முதலவர் ஆக்குங்கள் தேர்தல் பிரசாரம் செய்து ஹரியானாவை காப்பாற்றுங்கள். இந்தியாவே திரும்பி பார்க்கும்.


vadivelu
செப் 15, 2024 13:54

கடவுள் குற்றம் செய்பவர்களுக்கு பொறுத்து இருந்து தண்டனை தருவார்.


Palanisamy Sekar
செப் 15, 2024 13:54

அடேங்கப்பா இது உலக மெகா நடிப்புடா சாமியோவ். எப்படியெல்லாம் நாடகம் நடிக்கின்றார். அரசியலில் இதுபோன்ற நபர்களிடம் ஏமாறுகின்ற ஜனங்கள் ஒருக்காலும் உருப்படவே முடியாது. கொள்ளையடித்ததை ஒப்புக்கொள்ளாமல் கடவுள் துணையோடு வந்துட்டாராம். ராஜினாமா செய்வாராம். அதுக்கு ஏன் ரெண்டு நாள். ரெண்டு நிமிஷம் போதுமே. யோக்கியண்ணா அதுதான் சரியானது. அடுத்து பொண்டாட்டிய கொண்டுவரத்தான் போறாரு. அதுக்குள்ள நாடகத்தை அரங்கேற்றம் செய்ய துடிக்கின்றார். நீதிமன்றம் இவர் மீது பொய் வழக்கு என்று எங்கேனும் சொல்லி இருக்கா? சி பி ஐ யின் கைது சரிதான் என்றுதான் சொல்லியுள்ளார்கள். ஊழல் செய்த வழக்கில் உண்மைத்தன்மை உள்ளது என்றும் உறுதியாக சொல்லியுள்ளார்கள்..அதனையெல்லாம் வசதியாக மறைத்து என்னென்ன பொய் வேஷம் போடுறான் மனுஷன். அனுதாபமெல்லாம் படமுடியாது. ஜெயிலுக்குள் போய்தான் ஆகணும். தப்பிக்க நினைத்தால் கடவுளே ஏதாச்சும் செய்திடுவார்.


Kumar Kumzi
செப் 15, 2024 13:37

அடேங்கப்பா நீ மும்தா பேகத்தை மிஞ்சிவிட்டீர் ஐயா ஹீஹீஹீ


Duruvesan
செப் 15, 2024 13:33

பாஸ் ஓட்டுக்கு லஞ்சமா மாசம் உரிமை தொகை 2000 குடுப்பீன்னு சொல்லு, ஓட்டு பிச்சிக்கும்


S. Gopalakrishnan
செப் 15, 2024 13:23

ராஜினாமா செய்ய முடிவெடுத்து விட்டால் அதை உடனே செய்ய வேண்டியதுதானே ? இரண்டு நாட்கள் கழித்து சதுர்த்தி வருகிறது நல்ல முஹூர்த்தமோ ?


Barakat Ali
செப் 15, 2024 12:57

ரொம்ப அசிங்கப்படுவதைத் தவிர்க்க எடுத்த முடிவு ..... நமது துக்ளக்காரை விட சூதானமானவர் .....


Krishnakum
செப் 15, 2024 12:56

இவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் சட்டப்படி தவறு தவறுதான்... சட்டம் நிச்சயமாக முதல்வராக வெற்றி பெற்றாலும் அனுமதிக்காது.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை