உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் கெஜ்ரிவால் பிரசாரம் ஆம் ஆத்மி தலைவர் தகவல்

ஹரியானாவில் கெஜ்ரிவால் பிரசாரம் ஆம் ஆத்மி தலைவர் தகவல்

சண்டிகர்:“சட்டசபைத் தேர்தலில் மாநிலம் முழுதும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்வார். இதனால் இரட்டை சக்தி கிடைக்கும்,” என, ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா கூறினார்.மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.இந்நிலையில், ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா கூறியதாவது:ஹரியானாவின் அனைத்து தொகுதிகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்வார். இதனால் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழும். மேலும், இரட்டை சக்தி கிடைப்பதால் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.அக்டோபர் 5ம் தேதி நடக்கும் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் காத்திருக்கின்றனர்.பா.ஜ., ஆட்சியில் ஹரியானா மாநில வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். நேர்மையான அரசை தேர்ந்தெடுக்க ஹரியானா மக்கள் முடிவு செய்து விட்டனர்.தரமான கல்வி, மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம் ஆகியவற்றை செய்து தர ஆம் ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது. அதனால்தான் ஆம் ஆத்மியை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை