மேலும் செய்திகள்
27 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் பா.ஜ., ஆட்சி
09-Feb-2025
விக்ரம்நகர்:“பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சட்டசபைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளித்தனர்,” என, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்தார்.சட்டசபைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சி அமைத்த பிறகு நடக்கும் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று உரையாற்றினார்.அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பிரதமர் மோடியைப் பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் பல பொருத்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டில்லியை வெல்ல பிரதமர், இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.ஆனால், யாராவது மற்றொரு நபரை சிறியவராகக் கருதும்போதெல்லாம், அவர்கள் அதற்கு வெகு தொலைவில் இருந்து பார்க்கிறார்கள் அல்லது தங்கள் 'ஈகோ'வுடன் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். டில்லி மக்கள், அதற்கு தங்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.ஆதிஷியை தற்காலிக முதல்வராகவே அரவிந்த் கெஜ்ரிவால் நியமித்தார். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் மீண்டும் முதல்வராக பதவியேற்க அவர் திட்டமிட்டிருந்தார்.எனினும் எந்த கோப்புகளிலும் கையெழுத்திடவோ அல்லது முதல்வர் அலுவலகத்திற்குள் நுழையவோ அவருக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இவ்வாறு அவர் கூறினார்.
09-Feb-2025