உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை இருட்டில் வைத்திருக்கிறார்; கேரள முதல்வர் மீது கவர்னர் மீண்டும் புகார்

என்னை இருட்டில் வைத்திருக்கிறார்; கேரள முதல்வர் மீது கவர்னர் மீண்டும் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'மாநிலத்தில் நடைபெறும் தேசத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்த தகவலும் தராமல், என்னை முதல்வர் பினராயி விஜயன் இருட்டில் வைத்திருக்கிறார்' என கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.தேச விரோத செயல்கள் நடப்பது குறித்து என்னிடம் தகவல் தெரிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்? என கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் சரமாரி கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், கவர்னரின் நேரடி தலையீடு விதிகளுக்கு முரணானது என பினராயி விஜயன் பதிலடி கொடுத்தார். இதையடுத்து, முதல்வருக்கு எதிரான கருத்துகளை ஆரிப் முகமது கான் அள்ளி வீசி வருகிறார்.இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் குறித்து, கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது: மாநிலத்தில் நடைபெறும் தேசத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்த தகவலும் தராமல், என்னை முதல்வர் பினராயி விஜயன் இருட்டில் வைத்திருக்கிறார். அவரை நான் நம்பமாட்டேன். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான சில செயல்கள் நடப்பது தெரியவந்தால், ஜனாதிபதியிடம் புகார் அளிப்பது எனது கடமையா இல்லையா? தேசத்திற்கு எதிரான குற்றம் என்ன?

தேச விரோத செயல்கள்

நீங்கள் (முதல்வர்) எனக்கு விளக்கியிருக்க வேண்டாமா? அது உங்கள் கடமையல்லவா? உங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டீர்கள். தகவல் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதியும், அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை.தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.,க்கு சம்மன் அனுப்பிய பின்னரே அவர் எனது கடிதத்தை ஒப்புக்கொண்டு 27 நாட்களுக்குப் பிறகு பதிலளித்தார். ஆனால், அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தேச விரோத செயல்கள் நடக்கவில்லை என்று அவர் கூறுகிறார். அவர் (முதல்வர்) ராஜ் பவனுக்கு வருவதில்லை. அவர் அவர்களை (தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி) வர அனுமதிக்கவில்லை. இனி அவர்கள் வரத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
அக் 12, 2024 19:42

பாஜக ஆட்சியில் மொத்த நாடே இருளில் மூழ்கி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் வெளிச்சம் கேட்கிறதா?


அப்பாவி
அக் 12, 2024 18:42

முன்னாடியே வீட்டிற்கு போய் ஓய்வெடுக்கலாம். வயசான காலத்தில் அரசியல் எதுக்கு?புலம்பல் எதுக்கு?


என்றும் இந்தியன்
அக் 12, 2024 17:58

கவுன்சிலர் தனக்கு தோன்றிய விதத்தில் எம் எல் ஏ அனுமதி இல்லாமல் ஒரு காரியம் செய்ய முடியுமா குடி போலத்தான் ஒரு முதல்வர் கவர்னர் அனுமதி இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியாது. கவர்னர் யாரு நான் முதல்வர் நான் நினைத்ததை தான் செய்வேன் என்றால் அப்போ முதல்வர் என்பவர் ஒரு அறிவிலியான தீவிரவாதி என்று தான் கொள்ளவேண்டும்


Rajendran K
அக் 12, 2024 12:12

Are you writing above this after had kanja,


GMM
அக் 12, 2024 10:59

கவர்னர், தலைமை செயலாளர் உடன் தொடர்பு கொள்ள வேண்டும். தலைமை அதிகாரிகள் எப்போதும் கவர்னருக்கு கட்டுப்பட்டவர்கள். கட்டுப்பட வில்லை என்றால் ஆளும் அரசியல் கட்சிகள் நிர்வாகத்தில் தலையிட முடியாது. விஜயன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரை மட்டும் தான் செய்ய முடியும். எந்த உத்தரவும் போட முடியாது. கேரள தலைமை அமைச்சர் மீது மக்கள் பிரதிநிதிகள், மக்கள் புகார் கூறலாம் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கூற கூடாது.


raja
அக் 12, 2024 10:10

நீங்கனாவது பரவாயில்லை இருட்டில் தான் இருக்கீங்க ஆனா தமிழர்களாகிய நாங்கள் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் எங்களை போதை மருந்து, கஞ்சா மற்றும் மது வுக்கு அடிமையாக வைத்து இருக்கிரார்கள்.. எங்கன போய் சொல்ல....


மீணா
அக் 12, 2024 09:49

இவகளுக்கு இதே பொழப்பா போச்சு


புதிய வீடியோ