உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1 கோடி லிட்டர் பால் உற்பத்தி விரைவில் எட்டுகிறது கே.எம்.எப்.,

1 கோடி லிட்டர் பால் உற்பத்தி விரைவில் எட்டுகிறது கே.எம்.எப்.,

மைசூரு: ''கர்நாடகாவில் பால் உற்பத்தி, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கே.எம்.எப்., வரலாற்றில் முதன் முறையாக, 94.26 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது,'' என, அதன் நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகாவில் பால் உற்பத்தி, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மே 31ல், 94.26 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது கே.எம்.எப்., வரலாற்றில் இந்த அளவுக்கு பால் உற்பத்தியானது, இதுவே முதன் முறையாகும். விரைவில் பால் உற்பத்தி, 1 கோடி லிட்டரை அடையும் என, எதிர்பார்க்கிறோம்.இம்முறை கோடை காலத்தில், மக்களின் தேவைக்கு ஏற்ப பால், மோர், தயிர், லஸ்சி உட்பட மற்ற உற்பத்தி பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. 39,000 லிட்டர் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது.மாநிலத்தில் பால் உற்பத்தி அதிகரித்ததால், மும்பைக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் பால் விற்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகம், சென்னையில் தினமும் 35,000 லிட்டர் நந்தினி பால் விற்பனையாகிறது.நந்தினி பார்லர்களில், கே.எம்.எப்., உற்பத்தி பொருட்கள் கிடைக்கும்படி பார்த்து கொள்கிறோம். பால் வினியோகித்த விவசாயிகளுக்கு நிர்ணயித்த நேரத்தில் பணம் கொடுக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை