உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் ஹைடெக் வசதி கிண்டல் செய்யும் குமாரசாமி

சிறையில் ஹைடெக் வசதி கிண்டல் செய்யும் குமாரசாமி

மாண்டியா : ''பரப்பன அக்ரஹாரா சிறையில், ஹைடெக் வசதிகள் செய்யப்படுகின்றன. அரசு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்,'' என மத்திய அமைச்சர் குமாரசாமி கிண்டல் செய்தார்.மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஹைடெக் அரசு என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு, ஐந்து நட்சத்திர ஹோட்டலை போன்ற வசதிகள் உள்ளன. தற்போது நடிகர் தர்ஷன் விஷயத்தில், அம்பலத்துக்கு வந்துள்ளது.இந்த கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளதாம். இத்தகைய அரசின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வராது.மாநில அரசு தன் தவறை மூடி மறைக்க, மக்களை திசை திருப்புகிறது. சில விஷயங்களை முன்னிலைக்கு கொண்டு வந்து, மக்களை ஏமாற்றுகிறது.அதிகாரிகளால் நியாயம் கிடைக்காது. நீதிமன்றத்தால் மட்டுமே நியாயம் வழங்க முடியும். சிறையில் ஹைடெக் வசதிகள் கிடைப்பதற்கு, அரசே பொறுப்பு. சிறையில் கைதிகளுக்கு ராஜ உபசாரம் கிடைப்பது, புதிய விஷயம் அல்ல. இதற்கு முன்பிருந்தே நடக்கிறது. இதை பற்றி விசாரணை நடக்க வேண்டும் என, டி.ஜி.பி., மற்றும் டி.சி.பி., இடையே பெரிய கலாட்டாவே நடந்தது.மாநிலத்தில் அரசே இல்லை. நிர்வாகமே நடக்கவில்லை. ஊழலை பற்றி வீதியில் பேசியபடி பணியாற்றுகின்றனர். அரசில் அமைச்சர்களுக்கு வேலையே இல்லை. முதல்வருக்கு அவரது ஊழலை பற்றி பேசவே, நேரம் போதவில்லை.பணம் உள்ளவர்கள், எதை வேண்டுமானாலும் வாங்கலாம். இறந்த ரேணுகாசாமியின் குடும்பத்தினர் வேதனையுடன் பேசுகின்றனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை சொல்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ