உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி வழக்குகளை கண்காணிப்போம்!

செந்தில் பாலாஜி வழக்குகளை கண்காணிப்போம்!

புதுடில்லி : தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், விசாரணை நீதிமன்றம் நடத்தும் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்' என, நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர். மேலும், செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளின் விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் ஏழு மாதங்களுக்கும் மேல் தாமதம் செய்தது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.கடந்த 2011 - 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி, 48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்திருந்தனர்.

குற்ற பத்திரிகை

இதன் அடிப்படையில் பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைது செய்தது. அவர் மீது, 3,000 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த ஆண்டு ஆக., 12ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள், தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, போக்குவரத்து துறையில் வேலை பெறுவதற்காக பணத்தை கொடுத்து ஏமாந்த ஆரணியைச் சேர்ந்த ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேண்டுமென்றே விசாரணையை துவங்காமல் தாமதம் செய்கின்றனர். 'இந்த தாமதத்துக்கான காரணங்களை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க வேண்டும். ஓராண்டுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்' என, கோரியிருந்தார். இந்த மனு, கடந்த மாதம் 23ல் விசாரணைக்கு வந்தபோது, 'செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அது தொடர்பான கோப்பு கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. அவர் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே விசாரணையை துவங்க முடியும்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி, தமிழக அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்த ஆவணங்களின் நகல் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாக இருந்தால், அவரது பெயரையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரமாண பத்திரம்

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் மாநில அரசு தரப்பில் தாமதம் இல்லை. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய, ஆக., 23ம் தேதி இரவு தான் கவர்னர் ரவி அனுமதி அளித்தார்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதை கேட்ட நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி பிறப்பித்த உத்தரவு:வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது, ஏழு மாதங்களுக்கும் மேலாக முடிவெடுக்காமல் கவர்னர் தாமதம் செய்தது ஏன்?

அறிக்கைகள்

அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்துமே சிக்கல் நிறைந்ததாக உள்ளன. மனுதாரர் கோரியபடி சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். விசாரணையின் போக்கை அறிய, அவ்வப்போது அறிக்கைகள் பெற்று ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Narayanan
செப் 26, 2024 11:24

ஏதோ மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று உச்சநீமன்ற நீதிபதிகள் ஆளுநரை கேள்வி கேட்டு பழியை அவர் மேல் சுமத்துகிறது .ஆளுநர் திமுகவின் பித்தலாட்டங்களை அடிவரை அலசி ஆராய்ந்து பார்த்துதான் தாமதப்படுத்திக்கிறார் . ஆளுநருக்கு தனியாக விளக்கம் கேட்து பின்னர் பொது வழியில் சொல்லி இருக்கலாம் .


Narayanan
செப் 26, 2024 11:03

இந்த தீர்ப்பை வழங்கவே நீதிபதி அல்லியை மாற்றினார்கள் . ஏதோ உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பையும் கொடுத்து அடுத்தவர்கள் மேல் பழியை போட்டு தப்பிக்கிறது . நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக வழுக்குகள் நிலுவையில் இருக்கிறதே ஏன் ?


Narayanan
செப் 04, 2024 13:09

உச்சநீதிமன்றம் குடியரசு தலைவர் , துணை குடியரசு தலைவர் , பிரதமர் , கவர்னர் இவர்களின் அதிகாரத்தில் தலையிட்டு அபவர்களின் நேரத்தை வீணடிக்கறார்கள் .


sankaranarayanan
செப் 03, 2024 20:46

உச்ச நீதிமாற்றம் இது போன்ற அரசியல் வழக்குகளை தாமதம் ஏன் கேட்கும்போது அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் ஓய்வுபெற்ற பல லட்சம் ஊழியர்களின் பென்ஷன் இருப்பது மூன்று வருஷங்களாக ரிசர்வு வங்கி ஓய்வுபெற்றவர்களின் பென்ஷன் போன்று அப்டேஷன் செய்யவில்லை இதுபற்றிய வழக்குகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதை கொஞ்சமாவது உச்ச நீதிமன்றம் கண்டு கொள்ளுமா? பல லட்சம் வாங்கி ஓய்ஊதியர்களுக்கு ஒரு விடிமோட்சம் விரைவில் கிடைக்குமா ?


K.n. Dhasarathan
செப் 03, 2024 16:28

கவர்னர் பல குற்ற வழக்குகளில் இப்படித்தான் விசாரிக்க தடையாக இருக்கிறார், நீதிபதிகள் கேள்வி கேட்டு பிறகு விட்டு விடுகின்றனர், ஏன் ? சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் தானே ? கவர்னரை கோர்ட்டுக்கு வரவழைத்து கண்டிக்கலாம், ஏன் தண்டனை கொடுக்கலாம், இதனால் இனி வரும் காலங்களில் இதுபோல மீண்டும் நடக்காமல் இருக்கும். இல்லையெனில் இந்த மெத்தனப்போக்கு தொடரும், நீதிபதிகளே உங்கள் கையில் .


Sridhar
செப் 03, 2024 16:04

என்னய்யா இது கவர்னரே இப்படி தாமதம் பண்ணியிருக்குறாரு?? உடனே ஒப்புதல் கொடுக்கறதாவுட வேறென்ன வேலை இவருக்கு? திருட்டு திராவிட கும்பலுக்கு இவரும் துணை போயிருக்கிறாரா?


ஆரூர் ரங்
செப் 03, 2024 20:01

மாநில போலீஸ் இந்த வழக்கை எப்படி நடத்தும் என்பது தெரியாதா? செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்யாமல் இந்த வழக்கு நடத்தவும் முடியாது .ஆனால் யார் அவரைப் பதுக்கி வைத்திருப்பார்கள் என்று போலீசுக்கு தெரியாதா?ஆகமொத்தம் வழக்ககை நீர்த்துப் போகச் செய்யத்தான் அரசு முயற்சிக்கிறது என்பது கவர்னருக்கு தெரிந்தால் கவர்னர் இப்படித்தான் நடந்து கொள்வார். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் இருந்தால் சரி.


vee srikanth
செப் 03, 2024 13:13

நிறைய வழக்குகள் தேங்கி இருப்பதற்கு என்ன சொல்வார்கள் ??


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 12:42

அடித்த கொள்ளையில் குடும்பத்துக்கு தவறாமல் கட்டிங் கொடுத்து செழிப்பாக்கிய செபா வை பலி கொடுத்து மன்னர் புலிகேசியார் தப்பியது நியாயமா ????


ஆரூர் ரங்
செப் 03, 2024 12:33

A2 அசோக்குமாரை இருக்குமிடம் தெரிந்தே போலீஸ் கைது செய்யாமலிருந்தால் கவர்னர் ஒப்புதல் தந்தாலும் வழக்கு விசாரணை நகராது. குற்றவாளிகளை திமுக கடைசிவரை காப்பாற்றும். கப்பத்துக்கு நன்றிக்கடன்?. கவர்னர் செய்தது சரி.


MADHAVAN
செப் 03, 2024 12:25

பிஜேபி ஆட்சிக்கு வரச்சொல்லி பிரஷர், பிஜேபி கு வந்தவுடனே ஊழல் பண்ணலை னு சொல்லிடுவானுங்க, அஜித்பவர், சோரன், அப்புறம் எடியூரப்பா, குமாரசாமி, ஏன் நம்மவூர்லயும் தினகரன் இருக்காரூ, ஓ பி எஸ்


Mettai* Tamil
செப் 03, 2024 14:06

நீங்க சொல்ற, இவங்க செய்த ஊழலுக்கு ஆதாரம் இருந்தால் தாராளமாக வழக்கு தொடரலாமே....மத்தியில் எதிக்கட்சி , மாநிலத்தில் ஆளுங்கட்சி . தமிழ் நாட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ மரணம் ,கொடநாடு கொலை வழக்கு என ஏகப்பட்ட வழக்கு போட்டு நீதிய நிலை நிறுத்துவோம் என்று சொன்னது என்னாச்சு . இதற்கு என்ன பதில் இருக்கு மாதவா ........உங்க owner காட்டும் 200 , கண்ண மறைக்குதா ......


புதிய வீடியோ