உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குறைந்த செலவில் யாத்திரை திட்டம்

குறைந்த செலவில் யாத்திரை திட்டம்

பெங்களூரு: ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கர்நாடக - பாரத் கவுரவ் துவாரகா யாத்திரை என்ற, புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை:பக்தர்கள் குறைந்த செலவில் துவாரகா நாத் கோவில், நாகேஸ்வரா, சோமநாதர், திரம்பகேஸ்வரா கோவில்களுக்கு அழைத்து செல்லும் நோக்கில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கர்நாடக - பாரத் கவுரவ் துவாரகா யாத்திரை என்ற, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த கோவில்களுக்கு சென்று தரிசிக்க, 30,000 ரூபாய் செலவாகும். இதில் மாநில அரசு சார்பில், 15,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். பக்தர்கள், 15,000 ரூபாய் செலுத்த வேண்டும். பயணியர் முன் பதிவு செய்து கொள்ளலாம்.மாநிலத்தின் 'சி' பிரிவு கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பாரத் கவுரவ் துவாரகா யாத்திரை செல்ல விரும்பினால், இம்மாதம் 20ம் தேதிக்குள், தேவையான ஆவணங்களுடன், அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து, விண்ணப்பிக்க வேண்டும்.கர்நாடக - பாரத் கவுரவ் துவாரகா யாத்திரைக்கு, டிக்கெட் முன் பதிவுக்கு, https://www.irgtcttourism.com/karnatakabgaurav என்ற இணைய தளத்திலும், 90031 40710, 85959 31292, 85959 31294, 97316 41611, 85959 31293, 85959 31291 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை