உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோடை மழை உபயம் பசுமையான வனப்பகுதி

கோடை மழை உபயம் பசுமையான வனப்பகுதி

மைசூரு: கர்நாடகாவில், நடப்பாண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே, அனைத்து மாவட்டங்களிலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. அணைகள், ஆறுகள், ஏரிகள் வற்றின. வனப்பகுதிகளும் பசுமையை இழந்தன. ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.வன விலங்குகளும், வெப்பத்தை தாங்க முடியாமல் பரிதவித்தன. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டன. சில நாட்களாக மாநிலத்தில், கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த பகுதிகள், பசுமையாக மாறுகின்றன.மைசூரிலும் பரவலாக மழை பெய்வதால், நாகரஹொளே வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளது. வன விலங்குகளின் நடமாட்டமும் தென்படுகிறது. கபினி அணைப் பகுதியில், யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெறுமை உட்பட, பல்வேறு விலங்குகள் நடமாடுவதை காண முடிகிறது. சுற்றுலா பயணியரும் குஷியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி