உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெஜந்தா ரயில் விரிவாக்கப் பணிகள் மஞ்சள் வழித்தடத்தில் சேவை பாதிப்பு

மெஜந்தா ரயில் விரிவாக்கப் பணிகள் மஞ்சள் வழித்தடத்தில் சேவை பாதிப்பு

புதுடில்லி:மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் சமய்பூர் பட்லி, ஜஹாங்கீர் பூரி இடையே நான்கு மாதங்களுக்கு ஒரே பாதையில் மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுமென, டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.டில்லி மெட்ரோ மொத்தம் 12 வழித்தடங்களில் 393 கி.மீ., நீளத்திற்கு 288 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.அதிகரிக்கும் பயணியரின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டும் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.அதன்படி, மெஜந்தா வழித்தடமான ஜனக்புரி மேற்கு முதல் ஆர்.கே., ஆஸ்ரமம்; மஜ்லிஸ் பார்க் முதல் மௌஜ்பூர் வரை; ஏரோசிட்டி முதல் துக்ளகாபாத் வரை; லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி பிளாக் வரை; இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தம் வரை; ரிதாலா முதல் பவானா -நரேலா நான்காம் கட்ட விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன.இவற்றில் மெஜந்தா வழித்தட விரிவாக்கப்பணிகளுக்காக மஞ்சள் வழித்தடமான சமய்பூர் பட்லி முதல் ஜஹாங்கீர் புரி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.இந்த ரயில் நிலையங்களில் நேற்று முதல் நான்கு மாதங்களுக்கு இரவு 10:00 மணி முதல் காலை 7:00 மணி வரை ஒற்றை வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.மஞ்சள் வழித்தடமானது, டில்லியின் சமய்பூர் பட்டிலியை ஹரியானாவின் குருகிராம் - மில்லினியம் சிட்டி சென்டருடன் இணைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்