உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க மாநிலத்தை இழிவுபடுத்தும் பா.ஜ.,: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தை இழிவுபடுத்தும் பா.ஜ.,: மம்தா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தை பா.ஜ., இழிவுபடுத்துகிறது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்யை சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் பெண்களில் சொத்துகளை அபகரித்ததாகவும், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், சந்தேஷ்காலி ஸ்டிங் ஆபரேஷன் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை எக்ஸ் சமூகவலைதளத்தில் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். வீடியோவில், சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்கவில்லை. மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டது என இருவர் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.

சதித்திட்டம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்குவங்க மாநிலத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பா.ஜ., சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. இந்தியாவை ஆண்ட எந்த கட்சியும் ஒரு மாநிலத்தையும், மக்களையும் இழிவுபடுத்த இந்த அளவுக்கு முயற்சி செய்யவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் மம்தா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

David S
மே 05, 2024 12:17

செல்வி Mamta பனர்ஜீ + சீட்கள் வெற்றி பெறுவார்கள்


David S
மே 05, 2024 12:15

மம்தா பனர்ஜீ +சீட் ஜெயிப்பார்கள்


Rajasekar Jayaraman
மே 05, 2024 10:41

அபிஷேக் கைது செய்தது தவறு என்றால் வழக்கு போடுவது தானே இவர் திருட்டு திராவிடத்தை மிஞ்சுவார் இவரை உள்ளே தள்ளி விடிவு விடக்கூடாது.


ராமகிருஷ்ணன்
மே 05, 2024 06:43

இந்த ரவுடி சொர்ணாக்காவால் இந்தியா வுக்கு அவமானம். ஓட்டு வங்கிக்காக இவர் செய்யும் அட்டூழியம் இவருக்கு எதிராக திரும்பி இவர்களை அழிக்கும்.


ஆரூர் ரங்
மே 04, 2024 21:00

சந்தேஷ்காலியில் அபாயகரமான ஆயுதங்கள் ஏராளமாக பிடிபட்டன. அத்தனைக்கும் வீடியோ ஆதாரம் எடுத்திருப்பார்கள். மஹ்மூதா இனி தப்பிக்க முடியாது.


Ramesh Sargam
மே 04, 2024 20:05

மமதை பிடித்தவர் போதாதா, மேற்கு வங்கத்தை இழிவுபடுத்த வேறு ஒருவர் வேண்டுமா ?


GMM
மே 04, 2024 19:56

திமுக இந்தி எதிர்ப்பு ஆம் ஆத்மி ஊழல் ஒழிப்பு மம்தா டாடா மோட்டார் தொழில் எதிர்ப்பு எந்த கொள்கையும் இல்லாமல் ஆட்சியை பிடித்த இந்த கட்சிகள், மாநில நிர்வாகத்தில் ஊடுருவி தன் கட்டுப்பாட்டில் வைத்து விட்டன நிர்வாகம், போலீசாரை எப்படியும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து விட்டனர் ஆளுநர் தவிர நீதிமன்றம் உட்பட மாநில கட்சிகள் பிடியில் நீதிமன்றம் நிர்வாக முறை விரும்புவது இல்லை சில மாநில அதிகார துஸ்பிரயோகம் பொய் தகவல்கள் கேன்சர் போல், நாடு முழுவதும் பரவுகிறது தடுக்கவும்


Duruvesan
மே 04, 2024 19:37

என்ன எரியுதா??


Mohan
மே 04, 2024 23:24

அப்படி என்ன ஆத்திரம் துருவேசர் என்ற பொய்யான புனை பெயரில் ஒளிந்துள்ள விடியல் சம்பள ஆசாமிக்கு? கருத்து சொல்ல விடியல் சம்பள ஆசாமிகளுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் உரிமை உள்ளது நீங்க இப்படி பொங்கி நக்கலடிக்கும் போதே தெரிகிறது, செய்திக்கு கருத்து சொல்வதை விட கருத்து சொல்பவருக்கு மிரட்டலும், நக்கலுமாக கமெண்ட் அடித்தால் நீங்கள் புத்திசாலி என்றோ உங்களது எஜமானர்கள் நல்லவர்கள் என்றோ ஆகப் போவது இல்லை மம்தா போன்ற " மூலி மூங்காரிகள்"" அதிக காலம் நிலைப்பது மேற்கு வங்க அறிவுஜீவிகளின் பொறுப்பற்ற கையாலாகாத்தனத்தினாலும், திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்து மம்தாவின் சதியினால் இந்திய அடையாளமும் ஓட்டுரிமையும் பெற்ற நன்றி மறந்த ""பங்களாதேச முஸ்லீம்களால்"" தான் என்பது உலகத்துக்கே தெரியும் எரிவது இயற்கை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை