உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடு திருட்டை தடுக்க முயன்றவர் வெட்டி கொலை: மூவர் கைது

ஆடு திருட்டை தடுக்க முயன்றவர் வெட்டி கொலை: மூவர் கைது

கோலார்: ஆடு கடத்தல்காரர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயற்சித்த இளைஞரை, கொள்ளையர்கள் கோடாரியால் வெட்டிக் கொலை செய்தனர்.கோலாரின் ஹளகேரி கிராமத்தில் வசித்தவர் சரணப்பா ஜம்மனகட்டி, 25. இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். ஆடுகளை வீட்டின் முன்பாக உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, இங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஆடுகளை கடத்த முயற்சித்தனர். சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட சரணப்பா ஜம்மனகட்டி, கடத்தல்காரர்களை விரட்டிச் சென்று, ஒருவரை பிடித்தார்.அப்போது மற்ற இருவர், கோடாரியால் சரணப்பாவை வெட்டிவிட்டு, தங்கள் கூட்டாளியை விடுவித்துக் கொண்டு தப்பினர்.பலத்த காயமடைந்த சரணப்பா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த கெரூர் போலீசார், உடலை மீட்டனர்.வழக்குப் பதிவு செய்து, பல கோணங்களில் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த கொலையாளிகள் யாகூப், 34, சல்மான் கரெமன்சூர், 32, சச்சின் பஜந்த்ரி, 28, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இவர்களும் ஹளகேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !