உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம்: மீண்டும் துவங்கியது போராட்டம்

மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம்: மீண்டும் துவங்கியது போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சத்ரபதி சம்பாஜிநகர் : மராத்தா சமூகத்தினருக்கு, ஓ.பி.சி., பிரிவில் இட ஒதுக்கீடு அளிக்ககோரி சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவக்கினார்.மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்தினரை சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே குரல் கொடுத்து வருகிறார்.இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு செப்., முதல் இதுவரை ஐந்து முறை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்.அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி இன சான்றிதழ் வழங்க வேண்டும், மழலையர் பள்ளி முதல் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி, அரசு வேலைகளில் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை மனோஜ் வலியுறுத்தி வந்தார். குன்பி என்பது, ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை குறிக்கிறது.இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மனோஜ் ஜராங்கே நேற்று துவங்கினார். அப்போது, “மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தர மஹாராஷ்டிர அரசு வேண்டுமென்றே மறுக்கிறது. துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கு மராத்தா சமூகத்தினர் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
செப் 18, 2024 19:07

சீசன் பிசினஸ்.


kulandai kannan
செப் 18, 2024 12:32

இவனுக்கு தைரியம் இருந்தால் எதிர்வரும் மராட்டிய தேர்தலில் போட்டியிடலாமே


Anantharaman
செப் 18, 2024 08:12

இவர்களெல்லாம் தொற்று நோய் கிருமிகள்


Kasimani Baskaran
செப் 18, 2024 05:10

பொழுது போகவில்லை என்றால் உடனே சாகும் வரை உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து எடை கூடியதுதான் மிச்சம்.


முக்கிய வீடியோ