வேற்று மத பெண்களை திருமணம் செய்யுங்கள்
தட்சிண கன்னடா: 'திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என்றால், வேற்று மத பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்,'' என, எழுத்தாளரான ஹிந்து பிரமுகர் சக்ரவர்த்தி சுலிபெலே தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சக்ரவர்த்தி சுலிபெலே பேசியதாவது:மத மாற்றம் மற்றும் 'லவ் ஜிகாத்'தை புறந்தள்ளி விடுங்கள். ஹிந்து மதத்தில் இருந்து வேற்று மதத்துக்கு மாறியவர்களை திருப்பி அழைப்பது எப்படி என்பது குறித்து நம் இளைஞர்களுக்கு, பயிற்சி கொடுங்கள்.திருமணம் செய்வதற்கு அவர்களுக்கு பெண் கிடைக்கவில்லை என்றால், மற்ற மத பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.ஹிந்துத்துவாவை மக்கள் பிரதிநிதிகள் மதித்தால் மட்டுமே, ஹிந்து மதம் தழைத்தோங்கும்.வக்பு சொத்துகள் தொடர்பாக நாடு முழுதும் பிரச்னை எழுந்துள்ளது.வக்பு சொத்துகளை கண்டறிய, மாநில காங்கிரஸ் அரசு, 150 கோடி ரூபாய் வழங்க உள்ளது. இதன் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது.இருபது நிமிட வீடியோவால் நம் பக்தி, நம்பிக்கையை ஒழிக்க முடியாது. எந்த மதமும் எந்த கட்சிக்கும் சொந்தமல்ல. ஹிந்து சம்பிரதாயங்களை எதிர்ப்பவர்கள், அமைச்சர் கே.எச்.முனியப்பாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்களை, மனம் மாற்றி மங்களூரு கொரகஜ்ஜாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு அவர்கள் கோவிலில் மன்னிப்பு கேட்ட பின், அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.இவ்வாறு கூறினார்.