உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புது ஆற்றல் கிடைக்கட்டும்: பிரதமர் வாழ்த்து

புது ஆற்றல் கிடைக்கட்டும்: பிரதமர் வாழ்த்து

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள ஹோலி வாழ்த்துச் செய்தி:வேற்றுமையில் ஒற்றுமையை ஹோலி பண்டிகை பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கிறது. நம் நாட்டிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வண்ணத் திருவிழா உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த மங்களகரமான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் புது உற்சாகமும், ஆற்றலும் கிடைக்கட்டும்,”என, கூறியுள்ளார்.டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா, முதல்வர் ரேகா குப்தா, எதிர்கட்சித் தலைவர் ஆதிஷி சிங், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உட்பட பல்வேறு தலைவர்கள் ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ