உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்

பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகராட்சி மேயர், பதவிப்பிரமாணத்தின் போது, 'இறையாண்மை' என கூறுவதற்கு பதிலாக, 'வகுப்புவாதம்' என, வாய் தவறி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிலாஸ்பூர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில், 49ல் பா.ஜ., வென்றது. இதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த பூஜா விதானி மேயராக தேர்வானார். அவரது பதவியேற்பு விழா, முங்கேலி நாகா மைதானத்தில், பொதுமக்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. பூஜா விதானி பதவி பிரமாணம் ஏற்றபோது, ''இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன். இந்திய ஒருமைப்பாட்டையும், வகுப்புவாதத்தையும் நிலை நாட்டுவேன்,'' என, வாய் தவறி உறுதியேற்றார்.இறையாண்மை என்பதற்கு பதிலாக வகுப்புவாதம் என கூறியதால், மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அதை கவனித்து திருத்தியதும், இரண்டாவது முறையாக திருத்தம் செய்து உறுதியேற்றார். ஆனால், 'இது பா.ஜ.,வின் நாடகம்' என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 'பிலாஸ்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், 1998ல் மாநகராட்சி கவுன்சிலர், மாநில பா.ஜ., மகளிரணி தலைவர் மற்றும் பொதுச் செயலர் என பொறுப்புகளை வகித்த ஒருவர், எப்படி வாய் தவறி உறுதி ஏற்றிருப்பார்' என காங்கிரசார் கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vee srikanth
மார் 03, 2025 10:04

நம்ம ஊரு lipstick ஆளு மாதிரி போல


Mecca Shivan
மார் 03, 2025 08:28

நம்ம ஊரு பெண் எம்பியைன் ரசிகையாக இருப்பாரோ அவர் ?


அப்பாவி
மார் 03, 2025 08:26

மனசில் இருந்தது வெளியே வந்திரிச்சு. நடத்துங்க தாயி


Kumar Kumzi
மார் 03, 2025 08:19

நம்பிள் ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்டையின் தொற்று நோய் வட இந்தியாவிலும் பரவிவிட்டது


Priyan Vadanad
மார் 03, 2025 07:47

இதிலேயிருந்து தெரியவில்லையா இவர்களது உள்ளூறிய கொள்கை?? வகுப்புவாதம், பிரிவினை, வெறுப்பு.


தமிழன்
மார் 03, 2025 03:16

போட்டோவை பார்த்தாலே பயங்கரமாக பயமாக உள்ளது


வாய்மையே வெல்லும்
மார் 03, 2025 06:36

அடேங்கப்பா... காங்கிரஸ் கட்சி கேடுகெட்ட அரசியலை விடவா... ரொம்ப டூமச் சார் உங்க எதிர்பார்ப்பு


Kumar Kumzi
மார் 03, 2025 08:16

ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட போல மேக்கப் போடல கொத்தடிமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை