உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனையில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றம்: அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்

யமுனையில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றம்: அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “யமுனை நதியில் இருந்து 10 நாட்களில் 13 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது,” என, டில்லி நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.யமுனை நதியில் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. அமைச்சர் பர்வேஷ் வர்மா யமுனை நதியில் படகில் சென்று, குப்பை அகற்றும் பணியை நேற்று ஆய்வு செய்தார்.

திறன் அதிகரிப்பு

யமுனை நதி மற்றும் கரைப் பகுதியில் செய்ய வேண்டிய துாய்மைப் பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் நிருபர்களிடம் வர்மா கூறியதாவது:டில்லி மாநகர் முழுதும் அனைத்து வடிகால்களும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் யமுனை நதியில் கலப்பதைத் தடுக்க அவற்றின் திறன் அதிகரிக்கப்படும்.சட்டசபைத் தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வதாக பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது. அதன்படி, ஆட்சி அமைத்தவுடனேயே யமுனையில் குப்பை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டது.கடந்த 10 நாட்களில் யமுனையில் இருந்து 13 லட்சம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது.

வெள்ளம்

கடந்த 2023ம் ஆண்டு வெள்ளத்தால் டில்லி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ளத் தடுப்புக் கதவுகள் சீரமைக்கப்பட்டு, உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.யமுனையை மீட்டெடுக்கும் பணியில் டில்லி அரசு மட்டுமின்றி, பிரதமரும் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Keshavan.J
மார் 06, 2025 10:27

ஆற்றங்கரை ஓரம் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றினால் போதும். கழிவு நீர் கலக்கமும் நிறுத்த பட வேண்டும். பிறகு ஆறு சுத்தமாக இருக்கும்


அப்பாவி
மார் 06, 2025 08:20

சரி எடுத்த குப்பைகளை எங்கே கொட்டுனீங்க?


Keshavan.J
மார் 06, 2025 10:23

அது ரீசைக்குள் செய்யப்பட்டு உரமாக தயாரிக்க படும் திரு அப்பாவி அவர்களே


Ganesh Subbarao
மார் 06, 2025 15:51

அப்பாவியின் வீட்டில்


Appa V
மார் 06, 2025 06:31

ஒரு நாளைக்கு 130 டன் என்றால் 15 ட்ரக்குகள் அளவுக்கு தான் எடுத்திருக்கிறார்கள்.. கிராமில் போட்டிருந்தாள் இன்னமும் பெரிய நம்பராக தெரியும் ..கூவம் சீரமைப்பு மாதிரி இருக்க வேண்டாம்


Kasimani Baskaran
மார் 06, 2025 06:11

புனிதமான பகவான் கிருஷ்ணர் ஓடியாடி விளையாடிய இடங்கள், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.


chandrasekaran t k, Tirupur
மார் 06, 2025 03:57

ரொம்ப குறைவா இருக்கே. ஆளுக்கு கால் கிலோ போட்டாலும் குறைந்தது 15 கோடி கிலோ வரணுமே. மக்கள் திருந்தி விடடார்களா.


முக்கிய வீடியோ