உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின் வேலியில் விலங்குகள் பலி அறிக்கை கேட்கிறார் அமைச்சர்

மின் வேலியில் விலங்குகள் பலி அறிக்கை கேட்கிறார் அமைச்சர்

பெங்களூரு: சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின் வேலியால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வன விலங்குகள் குறித்து, தகவல் தெரிவிக்கும்படி வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அமைச்சர் வெளியிட்ட சுற்றறிக்கை:வயல்கள், தோட்டங்களில் பயிர்களை பாதுகாக்க, சட்டவிரோதமாக மின் வேலி பொருத்துகின்றனர். இதனால் உணவு தேடி வரும் வன விலங்குகள், மின் வேலியை தாண்டும் போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன. யானை, சிறுத்தை, காட்டெருமை உட்பட பல்வேறு வன விலங்குகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவங்கள் நடந்துள்ளன.சந்தேகத்துக்கு இடமாக, வன விலங்குகள் உயிரிழந்தால், உடனடியாக வனத்துறை அமைச்சரின் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். வனத்துறைக்கு தெளிவாக அறிக்கை அளிக்க வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டவிரோதமாக மின்வேலி பொருத்தியதால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விலங்குகள், சந்தேகத்துக்கு இடமாக உயிரிழந்த விலங்குகள் குறித்தும், தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது, எத்தனை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது என்ற விரிவான விபரங்களும், அறிக்கையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை