மேலும் செய்திகள்
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
4 hour(s) ago | 38
கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
8 hour(s) ago | 4
பார்லியில் குரங்கு தொல்லை; சபாநாயகர் திண்டாட்டம்
13 hour(s) ago | 19
புதுடில்லி:மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீரென ராஜினாமா செய்து, கட்சியிலிருந்தும் விலகினார். இதுகுறித்து மற்றொரு அமைச்சரான சவுரப் பரத்வாஜ், ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் கட்சியை அழிக்க பா.ஜ., திட்டமிட்டு செயல்படுகிறது.எங்கள் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை பயமுறுத்த அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை பா.ஜ., பயன்படுத்துகிறது. இது எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கும், அமைச்சர்களுக்கும் 'அக்னி பரீட்சை' போன்றது.ராஜ்குமாரை கட்சியின் மற்ற உறுப்பினர்கள் ஏமாற்றுக்காரர், நேர்மையற்றவர் என்று நினைப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படிச் சொல்லமாட்டோம். அவர் பயந்துவிட்டார்.அவரது ராஜினாமா, கட்சியின் சில தொண்டர்களை தளர்ச்சியடைச் செய்யும் என்றாலும் தன்னை உடைக்கும் முயற்சிகளுக்கு எதிராக கட்சி வலுவுடன் நிற்கும்.ராஜ்குமார் ஆனந்த் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, அவரை பா.ஜ., ஊழல்வாதி என்று அழைத்தது. ஆனால் இப்போது அவரை மாலை அணிவித்து வரவேற்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
4 hour(s) ago | 38
8 hour(s) ago | 4
13 hour(s) ago | 19