கிரஹலட்சுமி பணத்தில் உணவு முதல்வருடன் மூதாட்டி சந்திப்பு
பெலகாவி, : 'கிரஹலட்சுமி' திட்ட பணத்தில் 200 பேருக்கு உணவு வழங்கிய மூதாட்டி, முதல்வர் சித்தராமையாவை சந்தித்தார்.கர்நாடக அரசு பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை கொடுக்கும், கிரஹலட்சுமி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெலகாவி ராய்பாக் சுத்தட்டி கிராமத்தின் அக்கதாயி லங்கோடி, 60, என்ற மூதாட்டி, கிரஹலட்சுமி திட்ட பணத்தை சேமித்து, ஊரில் நடந்த திருவிழாவின்போது 200 பேருக்கு உணவு வழங்கினார்.இந்நிலையில், நேற்று பெலகாவி மாவட்டத்தில் முதல்வர் சித்தராமையா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமைச்சர் லட்சுமியின் ஏற்பாட்டின்படி, பெலகாவி சாம்ரா விமான நிலையத்தில் வைத்து சித்தராமையாவை, மூதாட்டி அக்கதாயி சந்தித்தார். முதல்வருக்கு ரொட்டி ஊட்டி அன்பை வெளிப்படுத்தினார்.''கிரஹலட்சுமி திட்டத்தை நிறுத்த வேண்டாம்,'' என, முதல்வரை அவர் கேட்டுக் கொண்டார். ''எக்காரணம் கொண்டும் திட்டம் நிறுத்தப்படாது,'' என, முதல்வரும் உறுதி அளித்தார்.