உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியில் மூன்றாம் முறையாக மோடி மனு தாக்கல்!

வாரணாசியில் மூன்றாம் முறையாக மோடி மனு தாக்கல்!

வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ''உ.பி.,யில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் ஜெயிக்காது,'' என அவர் கூறினார்.லோக்சபாவுக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. நான்கு கட்டம் முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1ல் நடக்கிறது. அன்று தான் வாரணாசியில் ஓட்டு பதிவு. அதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய, கூட்டணி கட்சி தலைவர்கள், பா.ஜ., மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் புடைசூழ மோடி வந்தார்.

நால்வர் மட்டுமே

தேர்தல் அலுவலகத்தில் நுழைய எண்ணிக்கை கட்டுப்பாடு இருப்பதால், முதல்வர் யோகி ஆதித்யநாத், மோடியின் மனுவை முன்மொழிந்த பண்டிட் ஞானேஷ்வர் சாஸ்திரி உட்பட நால்வர் மட்டும் மோடியுடன் உள்ளே சென்றனர். நால்வரில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி. மற்ற இருவர் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர்.முன்னதாக நடந்த ஊர்வலத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மாநில கட்சிகளின் தலைவர்கள் மோடியுடன் வந்தனர். தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், தேவநாதன் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர். உடல்நிலை சரியில்லாததால் பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் வரவில்லை. ஊர்வலம் புறப்படும்முன் கங்கை கரையில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற மோடி, கால பைரவர் கோவிலில் ஆரத்தி எடுத்து சாமி கும்பிட்டார். அந்த படங்களை வலைதளத்தில் வெளியிட்டு, 'காசியுடனான என் உறவை எதனுடனும் ஒப்பிட முடியாது. காசி மக்களின் அன்பும், ஆதரவும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது' என குறிப்பிட்டார்.

காங்., ஜெயிக்காது

பின்னர் அளித்த பேட்டியில் மோடி கூறியதாவது:நாங்கள் ஏற்கனவே சொன்னபடி, 400க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாவம், காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது. உ.பி.,யில் ஒரு தொகுதியிலும் அது ஜெயிக்காது.கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் அங்கிருந்து ரேபரேலிக்கு ஓடி வந்துவிட்டார். அதற்கு கேரள மக்கள் ஏற்கனவே தகுந்த தீர்ப்பை அளித்துவிட்டனர். பல ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்த அமேதி தொகுதிக்கு ராகுல் செல்லவே இல்லை. இந்த லட்சணத்தில், இங்கு ஏன் வருகிறார் என்று ரேபரேலி மக்கள் கேட்கின்றனர்.இவ்வாறு மோடி கூறினார்.

ரூ.3.02 கோடி சொத்து

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு 3.02 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாக மோடி கூறியுள்ளார். அசையா சொத்து எதுவும் இல்லை. 52,920 ரூபாய் ரொக்கம், 2,85,60,338 ரூபாய் வங்கி முதலீடு களாக உள்ளதாக கூறியுள்ளார். சொந்த வீடு, நிலம், கார் இல்லை.கடந்த 2018 - 19 வருமான வரி கணக்கில், வருவாய் 11.14 லட்சமாகவும், 2022 - 23ல் 23.56 லட்சம் ரூபாய் எனவும் காட்டியுள்ளார். வருவாய்க்கான ஆதாரமாக, பிரதமர் சம்பளம் மற்றும் வங்கி வட்டியை குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த அதிகாரி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தன் வேட்புமனுவை வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ராஜலிங்கத்திடம் வழங்கினார். ராஜலிங்கம், தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா, இந்தியன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் மாலையம்மாள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர். வாரணாசி கலெக்டர் ராஜலிங்கம், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த செய்தியை சமூக வலைதளத்தில் பதிவு செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Velan Iyengaar
மே 15, 2024 09:49

தேர்தல் போட்டி விண்ணப்ப படிவத்தில் வீடு இருப்பதாக தெரிவித்தது உண்மையா அல்லது இப்பொது வீடு இல்லை என்று தெரிவித்திருப்பது உண்மையா?? வீடு இருந்தது உண்மையெனில் அதை விற்றுவிட்டாரா?? அதன் மூலம் கிடைத்த capital gain வரி எப்படி கட்டினார்? அல்லது வரியை கட்டாமல் இருக்க வேறு ஏதாவது அனுமதிக்கப்பட்ட பாண்டுகளில் அல்லது fund இல் முதலீடு செய்து இருக்கிறாரா? படிப்பு குறித்த சான்றிதழ் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்திருக்கிறாரா???


ஆரூர் ரங்
மே 15, 2024 11:23

கருணாநிதி எப்போது தன் படிப்பு பற்றிய சான்றிதழ்களை தேர்தல் மனுவில் காண்பித்தார்? சோனியா தான் ஒரு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி எனக் குறிப்பிட்டுவிட்டு பின்னர் அது டைப்பிங் மிஸ்டேக் என பின்வாங்கியது மறக்குமா ?


Dharmavaan
மே 15, 2024 13:56

முதலில் கேள் அடித்த கொள்ளை கணக்கை


J.V. Iyer
மே 15, 2024 05:03

இந்தமுறை நூறு சதவிகித மக்களும் உங்களுக்கே வாக்களிப்பார்கள், விஸ்வகுரு மோடிஜி அவர்களே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் -க்கு மேல் வெற்றிபெற வாழ்த்துக்கள்


ராஜ்68
மே 15, 2024 03:39

அஷ்டமி யிலா ?


ஆரூர் ரங்
மே 15, 2024 11:25

ஆம். பகவான் கிருஷ்ணன் பூவுலகில் வந்துதித்த மங்கலமான திதி.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி